சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்..? – 5 – Fazil Freeman Ali

Share

சேர‌நாட்டின் பெரும்பாலான‌ நில‌ப்ப‌ர‌ப்பை கைப்ப‌ற்றி, இந்திய‌ துணைக்க‌ண்ட‌த்தில் ஐரோப்பிய கால‌ணியாதிக்க‌த்துக்கு முன்னுரை எழுதிய‌ போர்ச்சுக்கீசிய‌ரை ம‌லையாள‌ ம‌ண்ணிலிருந்து விர‌ட்டி அடித்த‌வ‌ர்க‌ள் யார் என்ற‌ கேள்விக்கு, ஒற்றை வார்த்தையில் “ட‌ச்சுக்கார‌ர்க‌ள்” (Dutch) என்று சொல்கிக் க‌ட‌க்க‌லாம். ஆனால் அத‌ற்குள்ளும் ஒழிந்திருக்கிற‌து சில‌ சுவார‌ஸ்ய‌மான‌ வ‌ர‌லாற்று நிக‌ழ்வுக‌ள்.

ட‌ச்சு கிழ‌க்கிந்திய‌ க‌ம்பேனி 1602-ல் துவ‌க்க‌ப்ப‌ட்ட‌போது இந்திய‌ பெருங்க‌ட‌லில் 21 ஆண்டுக‌ள் முழு சுத‌ந்திர‌த்துட‌ன் செய‌ல்ப‌ட‌ அத‌ற்கு அனும‌தி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. ட‌ச்சு மொழியில் நிறுவ‌ன‌த்தின் பெய‌ர் Vereenigde Oostindische Compagnie (VOC). ஆசிய க‌ண்ட‌த்தில் வ‌ணிக‌ம் செய்ய‌ ஏக‌போக‌ உரிமை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ ஒரே ட‌ச்சு நிறுவ‌ன‌மாக‌ இது விள‌ங்கிய‌து. சில‌ வ‌ர‌லாற்று ஆய்வாள‌ர்க‌ள் “உல‌க‌ வ‌ர‌லாற்றிலேயே முத‌ல் ச‌ந்வ‌தேச‌ த‌னியார் நிறுவ‌ன‌ம் என்றால் அது VOC” தான் என்கிறார்க‌ள். அத‌ன் முத‌ல் த‌லைவ‌ர் Johan van Oldenbarnevelt.

நிறுவ‌ன‌ம் உருவாக‌ ட‌ச்சு நாடாளும‌ன்ற‌ம் வ‌ழ‌ங்கிய‌ சாச‌ன‌த்தின் கீழ்க‌ண்ட‌ வாச‌க‌ம் என்னை ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ வைத்த‌து. அசாதார‌மான‌ அதிகார‌ம் அது.

“The Royal Charter grants monopoly powers to the company including the ability to wage war, imprison and execute convicts, negotiate treaties, strike its own coins, and establish colonies”

– Royal Charter
States General of the Netherlands

அதாவ‌து… “இத‌ன்மூல‌ம் ட‌ச்சு ராயல் சாசனம் இந்த‌ நிறுவனத்திற்கு ஏகபோக அதிகாரங்களை வழங்குகிறது. இதில் போர் நடத்தல், குற்றவாளிகளை சிறைப்பிடித்த‌ல், மரணதண்டனை வ‌ழ‌ங்குத‌ல், பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை முடிவு செய்த‌ல், தன் சொந்த நாணயங்களைத் தயாரித்து புழ‌ங்குத‌ல் மற்றும் காலனிகளை நிறுவுதல் ஆகியவை அடங்கும்”

ஒரு அர‌சு த‌ன்நாட்டின் தனியார் நிறுவ‌ன‌ம் ஒன்றுக்கு இன்னொரு அர‌சுபோல் செய‌ல்ப‌ட‌ அதிகார‌ம் கொடுத்திருப்ப‌து ஆச்ச‌ரிய‌ம்தான், இல்லையா..? த‌ன‌க்கென்று சொந்த‌ நாண‌ய‌ம் அடிக்கும் அதிகார‌ம் என்ப‌தும் தானே குற்ற‌விய‌ல் ச‌ட்ட‌ங்க‌ளை வ‌குத்து ந‌டைமுறைப்ப‌டுத்துவ‌தும் ஒரு இறையாண்மை கொண்ட‌ தேச‌த்திற்கு ம‌ட்டுமே சொந்த‌மான‌ அதிகார‌ங்க‌ள் அல்ல‌வா..?

1602 முத‌ல் 1796 வ‌ரை, இந்துமா ச‌முத்திர‌த்தின் ஒப்ப‌ற்ற‌ க‌ட‌ல்வ‌ணிகரராக‌ VOC தான் திக‌ழ்ந்த‌து. ஒவ்வோராண்டும் 4,785 க‌ப்ப‌ல்க‌ளில் 26 ல‌ட்ச‌ம் ட‌ண் வ‌ணிக‌ப்பொருட்க‌ளை நெத‌ர்லாந்துக்கு ஏற்றிச்சென்று ஐரோப்பா முழுவ‌தும் விற்றிருக்கிறார்க‌ள். ஆர‌ம்ப‌த்தில் வ‌ணிக‌ம் ம‌ட்டுமே செய்திருந்த‌ க‌ம்பேனி, தொட‌ர்ந்து குவிந்த‌ செல்வ‌ம், உல‌க‌ம் முழுக்க‌ சொத்துக‌ள், ம‌ட்ட‌ற்ற‌ ம‌ரியாதை, செல்லுமிட‌மெல்லாம் செல்வாக்கு கார‌ண‌மாக‌ வ‌ணிக‌ம் க‌ட‌ந்து நாடுபிடிப்ப‌தில் மும்முர‌ம் காட்டிய‌து. ஒரு கால‌க‌ட்ட‌த்தில் கிழ‌க்கிந்திய‌ தீவுக‌ள் முத‌ல் இன்றைய‌ இந்தோனேசியா வ‌ரை ப‌ர‌ந்துவிரிந்த‌ நில‌ப்ப‌ர‌ப்பை ஆட்சி செய்திருக்கிற‌து VOC. பிற்கால‌த்தில் “சூரிய‌ன் அஸ்த‌மிக்காத‌ பிரித்தானிய‌ சாம்ராஜ்ஜிய‌ம்” உருவாக‌ கார‌ண‌மாக‌ இருந்த‌ ஆங்கிலேய‌ கிழ‌க்கிந்திய‌ க‌ம்பேனிக்கு நிக‌ரான‌ நிறுவ‌ன‌மாக‌ VOC இருந்த‌து என்றால் அது மிகையில்லை.

என்ன‌வொரு வ‌ர‌லாற்று ந‌கைமுர‌ண் பாருங்க‌ள்… போர்ச்சுக்கீசிய‌ வாஸ்கோ ட‌ காமாவின் க‌ட‌ல்வ‌ழித்த‌ட‌த்தை அடியொற்றி த‌ம் வ‌ணிக‌ப் பாதைக‌ளை க‌ட்ட‌மைத்துக்கொண்டு வியாபார‌ம் செய்த‌ ட‌ச்சுக்கார‌ர்க‌ள், முத‌லில் போரிட்டு கைப்ப‌ற்றிய‌தும் அதே போர்ச்சுக்கீசிய‌ர் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ கொழும்பு துறைமுக‌த்தை தான். விரைவில் ஒட்டுமொத்த‌ சிலோனின் (இன்றைய‌ இல‌ங்கை) வ‌ணிக‌த்தையும் த‌ன் முழுக்க‌ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ‌ந்த‌ VOC, ச‌ர்வ‌தேச‌ ச‌ந்தையில் ம‌சாலா பொருட்க‌ளின் தேவை அதிக‌ரிக்க‌வே, மெல்ல‌ இந்தியாவின் ப‌க்க‌ம் த‌ன் பார்வையை திருப்பிய‌து. இல‌ங்கைக்கு அருகே இருப்ப‌து தென்ன‌க‌ம் தானே, அதிலும் குறிப்பாக‌, இன்றைய‌ க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம், இல்லையா..? அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் அது திருவிதாங்கூர் நாடு.

1723-ல் வ‌ய‌நாடு என்ற‌ சின்ன‌ நில‌ப்ப‌ர‌ப்பில் நில‌ப்பிர‌புத்துவ‌ ஆட்சி ந‌ட‌த்திக்கொண்டிருந்த‌ த‌ன் த‌ந்தை ராம‌ வ‌ர்ம‌னிட‌மிருந்து அதை ப‌ர‌ம்ப‌ரை சொத்தாக‌ப் பெற்று ஆட்சி ந‌ட‌த்திக்கொண்டிருந்த‌வ‌ர் மார்த்தாண்ட‌ வ‌ர்ம‌ன். முழுப்பெய‌ர் Anizham Thirunal Marthanda Varma Kulasekhara Perumal (அனிஞ்ஞ‌ம் திருநாள் மார்த்தாண்ட‌ வ‌ர்ம‌ குல‌சேக‌ர‌ பெருமாள்)

த‌ன் முன்னோர்க‌ளைப்போல் வெறும் நில‌ப்பிர‌புத்துவ‌த்தை தொட‌ர்வ‌தில் மார்த்தாண்ட‌ வ‌ர்ம‌னுக்கு ம‌ன‌நிறைவு ஏற்ப‌ட‌வில்லை. த‌ன் த‌ந்தையின் கால‌ம் முத‌லே வேநாட்டிற்கு தொட‌ர்ந்து குடைச்ச‌ல் கொடுத்துக்கொண்டிருந்த‌ ‘எட்டுவீட்டில் பிள்ளைமார்” ம‌ற்றும் “யோக‌க்கார்” குடும்ப‌த்தின‌ரை (த‌ற‌வாட்டுக்கார‌ர்க‌ள்) ஒழித்துக்க‌ட்டிவிட்டு, த‌ன் திணையில் த‌ன‌க்கு எதிரிக‌ள் இல்லையென்ப‌தை உறுதிசெய்துவிட்டு த‌ன்னை மன்ன‌ராக‌ அறிவித்துக்கொள்கிறார். முடிசூட்டிய‌பின் அடுத்து மார்த்தாண்ட‌ வ‌ர்ம‌ன் செய்த‌து ராணுவ‌க் க‌ட்ட‌மைப்பை விரிவுப‌டுத்துத‌ல். பிர‌சித்திபெற்ற‌ க‌ள‌ரி ம‌ற்றும் வ‌ர்ம‌க்க‌லை ஆசான்க‌ளை தேடிப்பிடித்து ப‌டையில் சேர்த்து, அவ‌ர்க‌ள்மூல‌ம் ஒழுக்க‌மும் க‌ட்டுப்பாடும் உடைய‌ 50,000 பேர் கொண்ட‌ பெரிய‌ போர்ப்படையை உருவாக்கினார் மார்த்தாண்ட‌ வ‌ர்ம‌ன். இதில் பெரும்பாலோர் நாய‌ர் என்ற‌ வ‌குப்பை சார்ந்த‌வ‌ர்க‌ள் என்கிற‌து அர‌ச‌ குறிப்புக‌ள்.

இவ்வ‌ள‌வு பெரிய‌ ப‌டையை வைத்துக்கொண்டு சும்மாவா இருப்பான் ஒரு ம‌ன்ன‌ன்..? திருவ‌ன‌ந்த‌புர‌ம், ப‌த்ப‌நாப‌புர‌ம் என்று இர‌ட்டை த‌லைந‌க‌ர‌ங்க‌ளை உருவாக்கி, அண்டைய‌ நில‌ப்பிர‌புக்க‌ளை தோற்க‌டித்தும் துர‌த்தியடித்தும் ஒரு நாட்டை உருவாக்கினார் ம‌ன்ன‌ர்.

மார்த்தாண்ட‌ வ‌ர்ம‌னைப்ப‌ற்றி குறிப்பிடும்போது வ‌ர‌லாற்றாசிரிய‌ர் கே. என். க‌னேஷ் த‌ன்னுடைய‌ திருவிதாங்கூர் உருவான‌ வ‌ர‌லாறு நூலில் இப்ப‌டி எழுதுகிறார்…

“Mobilisation of additional resources involved territorial conquests. The territorial conquests of Marthanda Varma were intended not only for settling political differences but also for controlling areas that yielded food crops and commercial products, particularly pepper for the ports of trade in southern and central Kerala.. The reorganisation of land relations effected by Marthanda Varma following his conquest of Quilon, Kayamkulam, Tekkenkur and Vadakkenkur was essentially to ensure this control of resources.

– K. N. Ganesh, Historian
“The Process of State Formation in Travancore”

அதாவ‌து…

“கூடுதல் வளங்களைத் திரட்டுவது என்ப‌து பிராந்திய வெற்றிகளை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌மைவ‌து. இந்த‌ மார்த்தாண்ட வர்மனின் பிராந்திய வெற்றிகள் வெறும் அரசியல் வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக மட்டுமல்லாமல், உணவுப் பயிர்கள் மற்றும் வணிகப் பொருட்களை விளைவித்த நில‌ப்பகுதிகளை த‌ன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவ‌ர‌வும் ப‌ய‌ன்ப‌ட்ட‌து. குறிப்பாக, தெற்கு மற்றும் மத்திய கேரளத்தின் வணிகத் துறைமுகங்களுக்கு குருமிளகின் (black pepper) போக்குவ‌ர‌த்தை க‌ட்டுப்ப‌டுத்துவ‌து இத‌ன் பிர‌தான‌ நோக்க‌மாகும். மார்த்தாண்ட வர்மன் கொல்ல‌ம், காயங்குளம், தெக்கனூர், வடக்கனூர் ஆகிய இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர் ஏற்படுத்திய நில மறுசீரமைப்புக‌ள் இந்த வளங்களின் கட்டுப்பாட்டை உறுதி செய்வதாக இருந்தது”

இப்ப‌டி, சராச‌ரி ம‌ன்ன‌ர்க‌ளைப்போல் சுக‌போக‌த்திலும் ஆட‌ம்ப‌ர‌த்திலும் ம‌ட்டும் திழைக்காம‌ல் நாடு பிடித்த‌ல், ப‌டைப‌ல‌ம் பெருக்குத‌ல், நிர்வாக‌ சீர‌மைப்புக‌ள் செய்த‌ல் என்றிருந்த‌ ஆளுமையுள்ள‌ ம‌ன்ன‌ன் மார்த்தாண்ட‌ வ‌ர்ம‌னின் திருவிதாங்கூர் நாட்டை நோக்கி ட‌ச்சுக்கார‌ர்க‌ள் வ‌ந்த‌து அவ‌ர்க‌ளின் அறிவீன‌ம் என்ப‌தா.. அவ‌ர்க‌ளின் துர‌திஷ்ட‌ம் என்ப‌தா..?

Admiral Eustachius De Lannoy (அட்மிரல் யூஸ்டாசியஸ் டி லெனாய்) என்ப‌வ‌ர் த‌லைமையில் 31 ஜூலை 1741 அன்று ஐந்து போர்க்க‌ப்ப‌ல்ளோடு ட‌ச்சுக்கார‌ர்க‌ள் இன்றைய‌ கும‌ரி மாவ‌ட்ட‌த்தின் குள‌ச்ச‌ல் துறைமுக‌த்தை வ‌ந்த‌டைந்த‌ன‌ர். இந்த‌ திய‌தி ச‌ரிதானா என்ப‌தில் வ‌ர‌லாற்று ஆய்வாள‌ர்க‌ளிடையே க‌ருத்து மாறுபாடு இருக்கிற‌து. இப்ராஹிம் குஞ்ஞு, ப‌ணிக்க‌ர் போன்ற‌ வ‌ர‌லாற்று ஆய்வாள‌ர்க‌ள் இந்த‌ திய‌திதான் ச‌ரி என்கிறார்க‌ள். ட‌ச்சுக்கார‌ர்க‌ளின் குறிப்புக‌ளிலும் இதுவே க‌ண‌ப்ப‌டுகிற‌து.

துறைமுக‌த்தை நெருங்குகிறோம்; க‌ப்ப‌லுக்கு ந‌ங்கூர‌ம் பாய்ச்சுகிறோம்; ஊருக்குள் சென்று நாட்டை கைப்ப‌ற்றுகிறோம். இது ஒரு வ‌ழ‌க்க‌மான‌ மிலிட்ட‌ரி ப‌யிற்சி மாதிரித்தான் இருக்கும். ஒரு இந்திய‌ சிற்ற‌ர‌ச‌னா ந‌ம்மை எதிர்த்து நிற்க‌ப்போகிறான் என்று ஆண‌வ‌த்தோடு குள‌ச்ச‌ல் க‌ட‌ற்க‌ரையில் கால‌டி எடுத்துவைத்த‌ ட‌ச்சு அட்மிர‌ல் யூஸ்டாசியஸுக்கு பேரதிர்ச்சி காத்திருந்த‌து….

சும்மா கிடைத்த‌தா சுத‌ந்திர‌ம்..? – 6 – Fazil Freeman Ali

Leave A Reply