திராவிடத்தால் வாழ்கிறோம் 1 – கோவி.லெனின் + சொக்கலிங்கம்

Share

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஒரு தற்குறி கூட்டம் ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் நிலையில், திராவிடத்தால் வாழ்ந்தோம் என்று அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

பிஞ்சு நெஞ்சில் விஷ வித்துக்களை தூவினால் அதுவே விருட்சமாக வளரும் என்ற அபாயத்தை கடந்த காலத்தில் உணராமல் விட்டோம். ஆனால், இப்போது, சமூக வலைத்தளங்கள் பெருகி இலவசமாக விஷத்தை விதைக்கும் வாய்ப்புகள் பெருகியுள்ள நிலையில், அவற்றை மறுத்து, திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பது மட்டுமல்ல திராவிடத்தால்தான் வாழ்கிறோம் என்று சுருக்கமாக, ஆழமாக பதிவு செய்யும் முயற்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசகரான தோழர் கோவி.லெனின் ஈடுபட்டுள்ளார்.

முரசொலி பாசறை ஏற்பாட்டில், நூற்றாண்டுக்கு முன் நமது இழிநிலையையும், அதிலிருந்து திராவிட இயக்கம் நம்மை எப்படி மீட்டது என்பது பற்றியும் எளிய முறையில் தகவல்களை தருகிறார். அவருடைய தகவல்களுக்கு ஏற்ற சித்திரங்களை சொக்கலிங்கம் தீட்டியிருக்கிறார்…

நல்ல முயற்சி, எல்லோருக்கும் எளிய முறையில் திராவிட இயக்கத்தின் சாதனைகளை இந்த எழுத்துச் சித்திரங்கள் விளக்கிப் பதிய வைக்கும் என்பது உறுதி…

Leave A Reply