சிந்தனைக் களம் – 1- பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Share

என் வாழ்க்கையும் புரிதலும், இளவயதில் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், பேசுகிறார்கள் என நினைத்து நிம்மதியை இழந்து எத்தனை முறைகள் அழுதிருப்பேன். அது என்னை நான் புரியாத காலம்.

மற்றவர்கள் நான் யார் என எனக்குக் கூற அதனை நம்பி வலியில் வாழ்ந்த காலம் அது. எனது மடமை நிறைந்த காலம்.

சரியான பொழுது போக்கின்றி gossip பண்ணுபவர்கள் ஒருபுறம் இருக்க, அவர்களுடன் சேர்ந்து பேசிவிட்டு கதை காவி வருபவர்கள் அந்த வலிகளுக்கு காரணகர்த்தாவானார்கள்.

அவர்களை கழித்து விட்டேன். நிம்மதி வந்தது. என்னை நான் புரியத் தொடங்கிய காலம். இப்போது என்னைப் பற்றிய என் புரிதலால், என்னை நான் மதிப்பதால் நிம்மதியாக வாழ்கிறேன்.

மற்றவர்களின் அபிப்பிராயங்கள் என்னை யார் என கூறவில்லை. அது அவர்கள் தம் வாழ்வினை வைத்து, தமது நினைவுகள் செய்கைகள், இரகசிய ஆசைகள் நடவடிக்கைகளை மனதில் வைத்து அடுத்தவர் செய்வதாக பேசுகிறார்கள். அவர்கள் பேசியது என்னைப் பற்றியல்ல, தம்மைப் பற்றியதுதான் என காலம் கடந்து புரிந்து கொண்டேன். உலகத்தை மனிதர்களை புரிய ஆரம்பித்தேன்.

இந்த நீண்ட பயணத்தில் எனது அண்ணி வைதேஹி என்னை எனக்கு புரிய வைப்பதில் முன்னின்றார். தன்நம்பிக்கையை, சுயமரியாதையை ஊக்குவித்தார். சரியில்லை என சமாளிப்பதை விட, ராங்கியானவள் என்பது பாதுகாப்பைத் தரும் என்பதை கற்றுத்தந்தவர் என் அண்ணிதான்.

அவரே எனது முதுகெலும்பு. அவருக்கு தலைவணங்குகிறேன்.

அன்புள்ளங்களே!
உணர்தல் இன்றி வாழ்க்கை இல்லை. தவறு செய்பவர்களும் உணர வேண்டும். Victims உம் அழுது அழுது வாழ முடியாது. எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது என சிந்திக்க வேண்டும்.

தலைவிதி என முயற்சிக்காமல் இருப்பது தவறல்லவா! எமது நற்சிந்தனையாலும், முயற்சியாலும் தலைக்கு வருவதை தலைப்பாகையுடன் போக வைக்கலாம் அல்லவா! சிந்திக்கவும்.

எனது வாழ்க்கை கதையை உங்களை அழ வைத்தும் கூறலாம். உங்களை வாழ வைக்கும் உதாரணமாகவும் கூறலாம். நாம் வாழ்க்கையினை எப்படி பார்க்கிறோம் என்பதை பொறுத்ததே நமது இன்ப துன்பங்கள், ஏற்ற தாழ்வுகள் உருவாகிறது. நாமும் வாழத்து சாதிக்கத்தான் வந்தோம் என்பதை உணருங்கள். சிந்தியுங்கள்.

‘பொறாமைகள் உருவாவது தன்திறனை உணராததனால்,Victim ஆக வாழ்வதும் தன் பலத்தை அறியாததனால்தான்’ சிந்திக்கவும்.

சிந்தனைக் களம் – 2 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Leave A Reply