சிந்தனைக் களம் – 2 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Share

புரிதலின்றி விமர்சனம் செய்வது தவறு. கலாச்சார வேறுபாடுகளை, அடுத்தவரின் குடும்ப சூழ்நிலையை இராஜகுடும்பமாக இருந்தாலும் சரி, சரியான புரிதலின்றி பேசுதல் தவறு. தவறாக அர்த்தப்படுத்தப்படும் தொடர்ச்சியற்ற படங்களை பகிர்தல் தவறு.

முன்பின் என்ன நடந்தது எனத் தெரியாமல் முடிவுகளை எடுத்து விமர்சிப்பது தவறல்லவா? அதனைப் பற்றி சிந்தித்ததுண்டா?

உதாரணமாக
எமது திருமணங்களில் மாப்பிள்ளைத் தோழன் மணப்பெண் வரும்வரை மணவறையில் இருப்பார். எமது கலாச்சாரத்தை சம்பிரதாயத்தை புரியாதவர்கள் ஓர்இனத் திருமணம் என இலகுவாக விமர்சிக்கலாம். புரிகிறதா?

சிந்திக்கலாமே!

இப்படி பிற இனத்தவரை, பிரபலங்களின் வாழ்க்கையை, பக்கத்து வீட்டுக்காறரை, உறவு நட்புக்களை அறியாத தெரியாத நபர்களை, விமர்சிக்க முன்பு இதன் அவசியம் என்ன? இதில் எத்தனை வீதம் உண்மை உள்ளது.

எதற்காக இப்படிப் பேசுகிறேன், இதன் மூலம் நான் சேர்ப்பது பாவத்தைதா, புண்ணியத்தையா என சிந்திக்க வேண்டும்.

விமர்சிக்கும் மனது, அடுத்தவரின் கஷ்டத்தை பொழுதுபோக்கிற்காக இரசிக்கும் மனது எப்படியானது?

அன்புள்ளங்களே!
மீடியாவின் கதைகளுடன் ஈடுபட்டு உங்கள் மனங்களை உணர்வுகளை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
சிந்தியுங்கள்!

எமது சிந்தனையே எமது வாழ்க்கை.
எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடலாமா?
சிந்திக்கவும்.
நன்றி

சிந்தனைக் களம் – 3 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Leave A Reply