சிந்தனைக் களம் – 3 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Share

எமது சமுதாயத்தில் நிகழும் பல விடையங்களை கண்டும் காணாமலும் நகர்ந்து செல்ல பலரும் பழகிவிட்டார்கள். இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை என்ற அறிக்கைவேறு காரணம்தான் என்ன?

கணவன் மனைவிக்கு, காதலன் காதலிக்கு அடிப்பது இப்போதும் நடக்கிறது. 16 வயது தொடக்கம் 60,70வது வயதுவரை உள்ள பெண்கள் இன்றும் மௌனமாக emotional, physical,mental, verbal,sexual abuse ஐ அனுபவிக்கிறார்கள்.

பெண் அதனைப்பற்றி வெளியே பேசினால் தவறு,

இது முறையா?

ஏன் குற்றவாளிக்கு ஆதரவு.

Victim ற்கு தண்டனை?

சிந்திக்க வேண்டும்.

மகன் மகள் பொறியியலாளராக, வைத்தியராக கல்வியல் வெற்றி பெறாமல், வேறு துறைகளில் மாண்பு பெற்றாலும் சில பெற்றோர்கள் அதனை அவமானமாக கருதி, வேறு பிள்ளைகளுடன் ஒப்பிட்டு அவர்களின் மனங்களை உடைத்து, சுயமரியாதையை சிதைக்கிறார்கள்.

இது முறையா?

கொண்டாட்டங்களுக்கு போனால் “ உங்கட பிள்ள எந்த uni , ஓ என்ற இழுவையுடன் அப்ப medicine கிடைக்கேலயோ” என எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுகிறார்கள்.

இது முறையா?

இதன் அவசியம்தான் என்ன?

மகள் மருமகள், நட்பின் மகள்கள் மருமகள்கள் தாய்மைடைந்தால், என்ன பிள்ளை என கேட்பவர்கள், ஓ அப்ப பொம்பிளை பிள்ளையோ என இழுவையுடன் கேட்பது பெண்களாகவே உள்ளது.

பிள்ளை பிறந்து விட்டால் கறுப்போ வெள்ளையோ என்ற கேள்வி வேறு தன் இனத்தயே அப்படி வெறுப்பதன் காரணம்தான் என்ன?

ஏன் எம்மவர்களின் மனதில் இத்தனை வன்மங்கள், பொறாமைகள், வேதனையாக இருக்கிறது. அடுத்தவரின் வாழ்க்கையில் குறைகளை காண்டு திருப்தி அடைபவர்கள் என பலர்.

ஏன் ஏன் ஏன்?

நான் இதற்கு பதில்களை கூறப்போவதில்லை. ஆனால் இந்த மனநிலை உள்ளவர்களை சிந்திக்க வேண்டுகிறேன்.

மாற்ற மாற முடியாதது,
திருந்த திருத்த முடியாதது என எதுவுமில்லை.
(சுயநலவாதிகள் மட்டும் திருத்த/ திருத்த முடியாது)
அதனால் சிந்தனை நல்ல பலனைத் தரும். சிந்திக்கலாமே!

‘சுயநலம் தன் நலனை கெடுக்கும்’
சிந்திக்கவும்!
நன்றி

சிந்தனைக் களம் – 4 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Leave A Reply