சிந்தனைக் களம் – 5 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Share

மனிதர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பண்புடன் பேசுவதில் தவறில்லை.

ஆனால் ஒருவர் மரணமடைந்ததும் அவரை கேவலப்படுத்தி பேசுவது அழகற்ற செயலாகும். இடம், நேரம், காலம் உணர்ந்து பேசுவது அழகு.

அதுவே தமிழர் பண்பாடு அல்லவா!

அப்போது நாம் தமிழர் என்று புகழ்பாடுவது வார்த்தைகளால் மட்டும்தானா?

சிந்திக்க வேண்டும்!

இறந்த மனிதரை பற்றி பேசுபவர்கள் நான் சரியாக நடக்கிறேனா, என் மரணத்தின் போது என்ன பேசுவார்கள் என சிந்தித்ததுண்டா?

அதுவும் வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்து வசதிகளை அனுபவித்தபடி, ஊருக்கு சென்று பொருமை காட்டி வரும் எம்மவர்கள் மகாராணியை பற்றி பேசுவது, சுயநலத்தையும் அடுத்தவரை பயன்படுத்தும் மனநிலையையும் காட்டுகிறது.

இது சரியான பண்புதானா?

சிந்திக்க வேண்டும்!

வெறுப்பு நிறைந்த மனித மனங்கள் சாக்கடையாக்குகிறது. அங்கு அழகான மலர்கள் சுகந்தம் பரப்ப முடியாது. அதுவே மன உடல் நோய்களுக்கு வித்திடுகிறது.

அன்புள்ளங்களே!
ஏன் பலவிதமான வெறுப்புகள் உங்கள் மனங்களில் என எப்போதாவது சிந்தித்ததுண்டா?

அதன் அவசியம் என்ன?

வெளியே பார்வையை தூர ஓட விட்டு, உங்களை மறந்து, அடுத்தவரின் வார்த்தைகளுக்கும், தூண்டப்படும் உணர்வுகளுக்கும் எடுபட்டு உங்களை நீங்கள் வருத்துவது முறையா?

சிந்திக்கலாமே!

‘மகிழ்வற்ற மனங்கள் வெறுப்பை வளர்க்கிறது.
வெறுப்பு நிறைந்த மனம் மகிழ்ச்சியை இழக்கிறது’
சிந்தியுங்கள்!

உங்கள் வார்த்தைகள் உங்களை யார் என உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அதனால் சிந்தனைத் தெளிவுடன் பண்புடன் பேசுவதை பயிற்சியாகக் கொள்ளுங்கள்.

நன்றி

சிந்தனைக் களம் – 6 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Leave A Reply