சிந்தனைக் களம் – 6 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Share

தான் பேசும் வார்த்தைகளை தன் காதுகள் செவிமடுக்க, மூளை கிரகிக்க, இதயம் அதன் தன்மையை உணர ஆரம்பிக்கும் போது மனிதன் தன்னைத்தான் உணர்ந்து, மனிதன் மனிதனாக முமுமையடைய ஆரம்பிக்கிறான்.

அங்கேதான் நான் நேர்மையான மனிதன் என்ன அழகான உணர்வு ஆரம்பமாகிறது. அது பல உன்னதமான பயணத்திற்கு வழிகாட்டியாக மாறுகிறது.

நேர்மை உண்மையுடன் புத்திசாலித்தனம் வேண்டும். அல்லது ஏமாற்றங்களும் வலிகளுமே மீதமாகும்.

என்னால் கஷ்டப்பட முடியாது அதனால் நேர்மையாக வாழ முடியாது என்பதை விட, உங்கள் உலக அறிவை( streetwise ) வளர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.( உலக அறிவு புத்தகக் கல்வி அல்ல)

எதனை எங்கே கூற வேண்டும். எங்கே மௌனத்தை கடப்பிடிக்க வேண்டும். அழகான மயக்கும் வார்த்தைகளுக்கு எடுபடாமல் இருக்கும் நிதானம் வேண்டும்.

ஓடிஓடி உதவுகிறார்கள் , உருகி பேசுகிறார்கள் என்பதற்காக உங்கள் இரகசியங்களை வாழ்க்கை கதையினை கூறாமல் இருக்கும் நிதானம் வேண்டும்.

அடுத்தவரை பற்றி குறைகளை பேசினால், சேர்ந்து பேசாமல்இப்படித்தான் என்னைப் பற்றியும் பேசக்கூடும் என்ற கவனம் வேண்டும்.

நான் நல்லவன் என உலகிற்குக் காட்ட, பேச்சுக்கு எடுபட்டு பண, பொருள், சரீர உதவிகளை செய்து இழப்பை சந்திக்காமல் இருக்கும் திறன் வேண்டும்.

எந்த நிலையிலும் உங்கள் பண்பை இழக்காமல் இருக்கும் வைராக்கியம் வேண்டும். இப்படிப் பல….

அனேகமாக பூவோடு சேர்ந்த நாரையும் என்பதை விட, பன்றியுடன் சேர்ந்த கன்றாகவே பலர் மாறிவிடுகிறார்கள்.

நல்லவராக வாழ மனச்சாட்சியும் நிதானமும் வேண்டும். அது பலரின் பொழுதுபோக்குகளுக்கு இடஞ்சலாக இருப்பதனால் நிதானமின்றி உணர்வுகளுக்கு இடம் கொடுத்து வாழ்வினை சிக்கலாக்கி, அழுது வாழ்கிறார்கள். இது அவசியம்தானா? சிந்திக்க வேண்டும்.

‘நிம்மதியான வாழ்க்கை வேண்டுமானால்
நிதானம் வேண்டும்’
அவதிப்படாமல் நிதானமாக சிந்தித்தாலே பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சிந்திக்கவும்
நன்றி

சிந்தனைக் களம் – 7 – பாமினி ராஜஸ்வரமுதலியார்

Leave A Reply