சிந்தனைக் களம் – 7 – பாமினி ராஜஸ்வரமுதலியார்

Share

தனது சரி பிழைகளை உணராதவர்கள் தன்நிலை அறிவதில்லை.

மற்றவர்கள் மேல் குற்றம் சாட்ட முன்பு தன்னைத்தான் திரும்பிப் பார்ப்பது அவசியம்.

தன் பிழைகளை மறைக்க அடுத்தவரை அவமானப்படுத்தி, மற்றவர் கவனத்தை திசை திருப்புவதால் செய்த தவறு இல்லாமல் போய்விடுமா?

எனது பதிவுகள் மனச்சாட்சியை தட்டி எழுப்பவும், சிந்திக்க வைக்கவும் எழுதுகிறேனே அன்றி குறை குற்றம் கூற அல்ல.

திருந்துவதற்கு முதலாவது படி உணர்தலாகும்.

தவறுகளை செய்யாத மனிதர்கள் இப்பூமியில் இல்லை.

அதுவே மனிதர்களை பதப்படுத்தி பண்படுத்துகிறது.

அதனால் தனது தவறுகளை மறைக்க அடுத்தவர்களைப் பற்றி பொய்களை பேசாமல், அந்த அனுபவங்களால் எதனைக் கற்றேன் என பெருமையுடன் நகர்ந்து செல்லுங்கள்.

அதனால் எதிர்மறை பேச்சுக்களை செய்கைகளை செய்ய முன்பு ஒரு நிமிடம் நிறுத்தி சிந்தியுங்கள்.

‘நல்லவராக நடிப்பது திறமையல்ல.

நல்லவராக வாழ்வதே பெருமை’

சிந்திக்கவும்.

நன்றி

சிந்தனைக் களம் – 8 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Leave A Reply