சிந்தனைக் களம் – 8 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Share

என் முகமும் நானும் இன்று 3.30 ற்கு town இல் எனது nail Appointmentஐ மகள் book பண்ணி இருந்தார்.

மகள் வீட்டில் பேத்தியுடன் விளையாடி மதிய உணவு உண்டு relaxed ஆக இருந்து வெளிக்கிட 3.10ஆகிவிட்டது.

சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசர எண்ணத்தால் carஐ park பண்ணிவிட்டு 3.20 ற்கு வேகமாக நடந்தேன்.

அப்போது இந்திய அல்லது கறுப்பு இன இளைஞன் (இந்த நாட்களில் யாரைப்பார்த்தாலும் ஒரே மாதிரியாக தெரிகிறார்கள்)

என்னை நோக்கி வேகமாக வந்து, உங்கள் முகம் கருணையானதாக உள்ளது. கண்கள் இரக்கமானதாக தோன்றுகிறது.

நீங்கள் எதனையும் எதிர்பாராமல் உதவுகிறீர்கள். மற்றவர்கள் பலனை எதிர்பார்த்தே பழகுகிறார்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு பெண்மணி உங்களுடன் பொறாமையுள்ளவராக இருக்கிறார் ஆனால் உங்களைக் கண்டால் அன்புபோல் பேசுவார் என மேலும் பலதைக் கூறினார்.

அவர் கூறிய சில விடையங்கள் உண்மையானவைதான். ஆனாலும் எல்லோரும் என்னை பயன்படுத்தவே பழகுகிறார்கள் என்பது உண்மையல்ல.

இவர் இத்தனையும் விரைவாகப் பேச, இவர் யார், இவருக்கு என்ன வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் உருவானது.

நீங்கள் உங்களுக்காக நேரம் செலவிடுவதில்லை. ஐந்து நிமிடங்கள் என்னுடன் இருந்து பேசுங்கள், உங்கள் வாழ்க்கையை மாற்றும் விடையங்களை கூறுகிறேன் என்றார்.

நான் உசாராகிவிட்டேன். என் கைகடிகாரத்தைப் பார்த்து எனது appointment ற்கு ஐந்து நிமிடங்களே உள்ளது எனக் கூறி நகர, ஏழைகளுக்காக காணிக்கை தரமுடியுமா எனக் கேட்டபடி தனது கைபையை திறந்தார்.

ஏற்கனவே நான் உதவுகிறேன் என கூறியபடி வேகமாக கடந்து நடந்து போகும் போது சிந்தித்தேன்.

எத்தனையோ மனிதர்கள் town centreஇல் நடமாடிக் கொண்டிருக்க என்னிடம் வந்து இந்த மனிதர் பேசுகிறார் என்றால், இலகுவாக ஏமாற்றலாம் என என் நெற்றியில் ஒட்டியிருப்பதை போல் கண்டாரா?

மனதில் சிரித்துக் கொண்டேன்.

மேலும் கவனமாக இருக்க வேண்டும் என்ற செய்தியை அந்த இளைஞன் தந்ததாக எடுத்துக் கொண்டு சரியாக நேரத்திற்கு என் appointments ற்கு போய் சேர்ந்தேன்.

அன்புள்ளங்களே!
நான் நிம்மதியாக வாழ்வதனால், இந்த மனிதன் எதனை நினைத்து செயல்பட்டாரோ அது நடக்கவில்லை.

இதேநேரம் நான் மனச்சஞ்சலம் உள்ளவராக இருந்திருந்தால் , என் appointmentஐயும் மறந்து , கடவுள் செய்தி அனுப்பியிருக்கிறார் என அவருடன பேசி பணத்தையும் இழந்திருக்கக் கூடும்.

காக்கா காக்கா நீ அழகான பறவை எனக்கூறி பயன்பெற பல தந்திரிகள் காத்திருக்கிறார்கள். எச்சரிக்கை அவசியம்.

தவித்த முயல் அடிப்பதில் வல்லவர்கள் பலர்.

மனக்கஷ்டங்களில் இருக்கும்போதே அதிகவனம் தேவை.
சிந்திக்கவும்.
நன்றி

சிந்தனைக் களம் – 9 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Leave A Reply