சிந்தனைக் களம் – 9 – பாமினி ராஜேஸ்வரமுதலியார்

Share

கல்வியில் சிறந்து, நல்ல தொழில் புரிந்து எவ்வளவு முன்னேறி இருந்தாலும் பெண்கள் காதல் என வந்துவிட்டால் அறிவை தொலைத்து (insecure person) உணர்வால் பலயீனமானவர்களாக மாறிவிடுகிறார்கள். (அனைவரும் அல்லர்).

இது நல்லதல்ல. சிந்திக்கவும்.

நல்ல ஆண்கள் தைரியமுள்ள பண்பான பெண்களையே மதித்து காதலித்து திருமணம் செய்கிறார்கள்.

நல்ல துணை அமைய காலம் எடுத்தாலும் பொறுமையுடன் இருந்து மனிதர்களை உணர்ந்து அறிந்து சரியான முடிவை எடுப்பவர்கள் தன் பெறுமதியை அறிந்தவர்களாவர்.

சுயநலமான ஆண்களும் abusive குணமுள்ள ஆண்களும் insecure பெண்களையே காதலித்து, அழுவித்து, அடித்து அணைத்து குளப்பமான மனநிலையை உருவாக்கி, அதுவே அன்பு என நம்ப வைத்து, தன்னைவிட்டு போய்விடாமல் பயங்களை மனதில் உருவாக்கி, அடக்கிவைத்து ராஜாவைப் போல் வாழ்கிறார்கள்.

இது அவசியம்தானா?

(இப்போதும் இப்படியான abuse நடக்கிறது)

தன்பெறுமதியை அறியாத பெண் தனக்குத்தான் கொடுக்கும் தண்டணைபோலவே இதனை நான் காண்கிறேன்.

காதலிக்கும் போது, பல காரணங்கள் கூறி உங்களை தவிர்க்கும் போதும், தான் நினைக்கும் போது மட்டும் சந்திக்க அழைப்பதும், தொலைபேசியில் பேசுவதும் ஆணவம், மதியாத தன்மை போன்ற (warning signal) எச்சரிக்கை சமிக்கையாகவே படுகிறது.

அவர் அழைத்துவிட்டார் என உங்கள் திட்டங்களை இரத்து செய்து விட்டு, அவர்களின் பின்னால் ஓடும் போது, வாலாட்டும் நாலுகால் மிருகம் போலவே உங்களை பார்ப்பார்கள்.

எந்தப் பொய்யை சொன்னாலும் அது நம்பும், பேய்க்காட்டலாம் என்ற மரியாதை அற்ற சிந்தனையே அந்த ஆணுக்கு உருவாகிறது.

பெண்களே!
காதல் என்பது உணர்வின் தூண்டலாக அல்லது தன்னை ஒருவர் பார்த்துவிட்டார் என்ற உள்ளக் கிளர்ச்சியாக பலருக்கும் உள்ளது.

நேரமெடுத்து சிந்தியுங்கள் உண்மை புரியும்.
அன்புள்ளங்களே!
முதல் கோணல்,
முற்றும் கோணல் என்பார்கள்.

தன் பெறுமதியை அறியாத பெண் உணர்ச்சிவசப்பட்டு காதல் என பொருத்தமற்றவரை விரும்புவது, தனக்கும் தனது எதிர்கால சந்ததிக்கும் செய்யும் துரோகம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

அதனால்தான் பல ஆண்கள்( அனைவரும் அல்லவர்) கொம்புத் தேனைக் கூட எடுத்துவிடலாம் என வாயூறி துணிந்து நெருங்கி, தன்னை அறிந்த துணிவுள்ள பெண்ணின் சினத்திற்கு ஆளாகிறார்கள்.

‘ஆணுறுப்பு ஒரு மனிதனின் பாலினத்தை உறுதிப்படுத்துகிறது.
நல்ல பண்பு அவனை நல்ல ஆண்மகனாக மதிப்பை உயர்த்துகிறது’

பெண் என்பவள் உடலால் பலயீனமானவளாக இருந்தாலும், உள்ளத்தால் பலம் கூடியவளாக இருந்தால்தான் உலகம் உங்களை மதிக்கும்.

சிந்திக்கவும்!
நன்றி

Leave A Reply