நேரம் நல்ல நேரம் – 18 – ஆதனூர் சோழன்

Share

வயிற்று வலி தீர்க்கும் வழிகள்

வயிற்று வலியை அனுபவித்திருக்கிறீர்களா?

பல லட்சம் பேர் தாங்கள் வயிற்று வலியால் அவதிப்படுவதாக டாக்டர்களிடம் சிகிச்சை பெறுகிறார்கள்.

அதே சமயம், வயிற்று வலியை கொஞ்ச நேரம் பல்லைக் கடித்து அடக்கி, பின்னர் சரியாகிவிடுபவர்களின் கணக்கு நமக்கு தெரியாது.

அதற்கேற்ப வயிற்று வலியும் பல சமயங்களில் தானாகவே மறைந்து விடும் அல்லது சிறிதளவு மாற்று சிகிச்சைக்கு பிறகு மறையக் கூடும்.

இத்தகைய வயிற்று வலி விரிவான வகையில் பரவி, நெஞ்சு எரிச்சல், அளவுக்கு அதிகமான வாயு, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.

எனவே இவற்றை தவிர்க்க எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என நிபுணர்கள் சிலவற்றை வகுத்துள்ளனர்.

வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு ஜோடி அடிவயிற்றுக்கான பயிற்சிகளை செய்ய பழகுங்கள். இதன் மூலம் உங்கள் குடல் அமைப்பு சீராகும்.

எப்போதும் அதிக கொழுப்பு அடங்கிய உணவை உட்கொள்வதை தவிருங்கள். அதற்கு பதிலாக கொழுப்பு குறைந்த உணவுடன், கொழுப்பு அதிகமான உணவை சேர்த்து நாள் முழுவதும் சாப்பிடுங்கள்.

மலச்சிக்கலை தவிர்க்க தினமும் எட்டு கிளாஸ் தண்ணீரை குடியுங்கள்.

உங்களது இயற்கை அழைப்புகளை, சில நிமிடங்கள் கூட தள்ளிப்போடாதீர்கள். காலப்போக்கில் உங்கள் குடல் அமைப்பையே அது கெடுத்துவிடக் கூடும்.

நீங்கள் படுக்கைக்கு செல்வதற்கு சற்று முன்பு சாப்பிடாதீர்கள்.

நீங்கள் சிகரெட் புகைப்பவராக இருந்தால் உங்கள் சிகரெட் அளவையும் குறைத்துக் கொள்ளுங்கள். புகைப் பழக்கமும் ஜீரண அமைப்பை பாழ்படுத்தும்.

ஆசுவாசமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

நேரம் நல்ல நேரம் – 19 – ஆதனூர் சோழன்

Leave A Reply