சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

Share

மருத்துவ குறிப்புகளும் இடைக்காடச் சித்தரும்

இடைக்காடச் சித்தரின் மருத்துவம் இறவாமல் இருக்க

அயப் பொடியை காந்தம் கொண்டு எடுத்து சுத்தி செய்து ஒரு பலம் எடுத்து கல்வத்திலிட்டு தாளகத்தை சுத்தி செய்யவேண்டும். தாளகம் ஏழுபலம் எடுத்து திருமேனிச்சாறு விட்டு நன்கு அரைத்து கொட்டைப்பாக்குபோல உருட்டி எட்டுபடி காடியை ஒருபாண்டத்தி லிட்டு உருட்டிய மருந்தை தோளாந்திரமாக கட்டி எரித்து எடுத்து மூன்றுபலம் வெங்காரம் நவச்சாரம், துருசு, வீரம் வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்து கொள்ளவேண்டும்.

மேற்கண்ட ஐந்தையும் ஒன்றாகக் சேர்த்து கல்வத்திலிட்டு மேனிச்சாறுவிட்டு பன்னிரண்டு ஜாமம் அரைத்து மெழுகு பதத்தில் எடுத்து உருண்டையாக உருட்டி குகையிலிட்டு மூடி உலையில் வைத்து ஊத வெங்கலம் போல உருகி ஜெர்லிக்கும் இம்முறையை எந்த சித்தரும் கூறாமல் மறைத்துவிட்டனர்.

உலையில் வைத்த குகை நன்றாகப்பழுக்க ஊதியெடுத்தால் தூளாயிருக்கும் இந்த அயத்தூளை உருண்டையாகச் சேர்த்து முன்போலவே மேனிக்சாறுவிட்டு அரைத்து உருட்டி குகையிலிட்டு சில்லு மூடி உலையில் வைத்து ஊதியெடுக்க வேண்டும். இது போன்று ஏழு தடவைகள் ஊதியெடுத்தால் மாசு நீங்கி பொன்போல பிரகாசிக்கும்.

செந்தூரமாகுமட்டும் ஊதியெடுத்தால் முருக்கம் பூம்போன்ற நிறத்தில் செந்தூரம்காட்சி அளிக்கும். இதுவே சுயராச செந்தூர மாகும்.

இந்தச் செந்தூரத்தை சாப்பிட்டால் உயிரைப்பறிக்கும் எமுதூதனே காணாமல்போய்விடுவான். மோகினியும் குலைந்து போவாள் உடலானது வஜ்ஜிரம் போலாகும். இந்தச் செந்தூரத்துடன் தங்கம் சேர்த்து செந்தூரமானால் இறப்பு என்பதே இல்லை எனலாம்.

கல்லடைப்பு, சதையடைப்பு, பாண்டு ரோகம், சூலைநோய், காமாலை நோய் நீங்க

இரும்பு, செம்பு, எஃகு, காந்தம், பித்தளை, ரசம் வெங்காரம் கெந்தகம், மனோசிலை, திப்பிலிமூலம் அரிதாரம் இவைகளின் தூள்வகைக்கு ஒரு பலம்வீதம் எடுத்து கல்வத்திலிட்டு குமரிரசம் அதாவது சோற்றுக்கற்றாழையின் சாறுவிட்டு மூன்று நாள் அரைத்து வில்லைகளாகச் செய்து நன்கு உலர்த்தி ஒரு சட்டியில் வைத்து அதன்மீது நன்றாகப் பொருந்தும்படியாக மேலே ஒரு சட்டியை மூடி சீலைமண் ஏழுதடவைகள் செய்து கொள்ளவேண்டும்.

இதனை அடுப்பிலேற்றி பன்னிரண்டு சாமம் எரித்து எடுத்துப் பார்த்தால் இளஞ்சூரியனின் நிறமதில் செந்தூரமாகும். இந்தச் செந்தூரத்தில் அரைபணம் எடையெடுத்து அதில் தேன் அல்லது சீனி இவைகளில் கலந்து சாப்பிடவேண்டும் இதுபோன்று அரை மண்டலம் அதாவது இருபத்து நான்கு நாட்கள் சாப்பிட்டால் கல்லடைப்பு, சதையடைப்பு, பாண்டு, ரோகம், சூலை நோயினால் உண்டான வாய்வு, பித்தம், காமாலை நோய், உஷ்ண நோய்களெல்லாம் குணமாகும்.

பதினெட்டு வகை ஜன்னி, வாதம் குணமாக

வெங்காரம் ஒருபலம், கருநாவி ஒரு கழஞ்சு எடுத்து பசுவின் கோமியத்தில் ஆறுநாட்கள் ஊறப்போட்டெத்து உலர்த்தி அத்துடன் திப்பிலி மூலம் இரண்டு பலம் எடுத்து மூன்று சரக்குகளையும் கல்வத்திலிட்டு வெள்ளுள்ளிதைலம் விட்டு மைபோல அரைத்து தெடுத்து பசிப்பயிறு அளவுக்கு மாத்திரைகளாகச் செய்து நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் இம்மூன்றையும் ஒன்றுகூட்டி அதில் ஒரு மாத்திரையை போட்டு இழைத்து தினம் காலை மாலை இருவேளைவீதம் பத்து நாட்கள் கொடுத்துவர பதினெட்டுவகையான ஜன்னிளும் வாதமும் குணமாகும். இந்த சஞ்சவு மாத்திரையானது பெருவயிறு, விஷப்பாண்டு, சேத்தும நோய் பெருநோய், கண்களில் சிவப்பு, வாய்வு போன்றவைகளை குணமாக்கும். இச்… பத்தியம் இருக்கவேண்டும்.

கூடிய ரோகம், காசம் குணமாக

நாகம் ஒரு பலம் எடுத்து இரும்பு சட்டியில் போட்டு அடுப்பிலேற்றி உருக்கிடவேண்டும். உருகி வரும்போது எண்ணெயை அதில்விட்டால் நாகம் சுத்தியாகும். சுத்தியான நாகத்தை எடுத்து திரும்ப இரும்பு சட்டியிலிட்டு உருக்கி எடுத்து அதனைத் தூளாகக்கி மூன்று பலம்பால் துத்தம் எடுத்து தூளாக்கி அந்தத்தூளில் ஒருபலம் எடுத்து நாகத்தூளின் மீதுபோட்டு மூடவேண்டும்.

அதன்மீது கரியைப்போட்டு தீ மூட்டி அதன்மீது ஒரு பலம் போட்டதுபோக மீதமுள்ள தூளைப்போட்டு மூடவேண்டும். நெருப்பை இரண்டு நாழிகை ஊதி நல்லெண்ணெய் குத்தி எரித்தெடுக்க வேண்டும். இப்போது பஸ்மாயிருக்கும் இந்த பஸ்பத்தை பண எடை எடுத்து எள்ளெண்ணெயில் கலந்து காலை மாலை என இருவேளை தினம் சாப்பிட்டுவர ஈளை, க்ஷயம், காசம் போன்ற நோய்கள் குணமாகும்.

பிரமியம், வெள்ளை, பாத எரிவு நோய் நீங்க

சுக்கு, புளியம் புறணி சுடட சாம்பல், நெல்லி முள்ளி, பரங்கிச் சக்கை இவைகளில் வகைக்கு ஆறுபலம் வீதம் எடுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் திப்பிலி மூலம், கடுக்காய், சிறுநாகப்பூ தாளிசப்பத்திரி, தான்றிக்காய், மிளகு, ஏலம், செவ்வியம், அரிசி திப்பிலி இவற்றில் வக¬க்கு விராகன் எடை வீதம் எடுத்துக்கொண்டு, மோடி, நற்சீரகம், வெட்டிவேர், விளாமிச்சை வேர், சங்கம் வேர், கொத்தமல்லி, பச்சிலை, சிற்றரத்தை ஆகிய எட்டு சரக்குகளில் வகைக்கு ஒருபலம் வீதம் எடுத்துக்கொண்டு இவற்றை தனித்தனியாக சட்டியில்போட்டு அடுப்பிலேற்றி கருகாமல் பொன்வறுவலாக வறுத்து, எடுத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ளவேண்டும். நான்குபலம் வெல்லத்தையும் எடுத்து ஒரு பாத்திரத்தில்போட்டு அடுப்பிலேற்றி ஆறுபலம் நெய்விட்டு செய்து லேகியத்தில் தான்றிகாய் அளவெடுத்து தினசரி இருவேளை நாற்பத்தெட்டுநாள் சாப்பிட மேற்படி நோய்கள் குணமாகும்.

பேதியாக

வயிறு சுத்தமாக இருப்பதற்கு திருநீலகண்ட மெழுகு முறை உண்டு, சுத்திசெய்த நேர்வாளகப் பருப்பு மூன்று கழஞ்சு, சுக்கு மூன்று கழஞ்சு, பழைய வெல்லம் மூன்று கழஞ்சு இவைகளை கல்வத்திலிட்டு இரு சாமம் அரைத்து மெழுகுபோல் ஆனதும் உருண்டைபோல் செய்து வைத்துக்கொள்ளவும் இதிலிருந்து குன்றியளவு எடுத்து சாப்பிட்டால் காலையில் மூன்று தடவை வாந்தியும் பேதியும் உண்டாகும்.

மற்றொரு முறை ஒரு பலம் வாளத்தை எடுத்து சாணத்தில் இரண்டு நாழிகை கொதிக்க வைத்து எடுத்து மேலொடு நெய்சட்டியில் போட்டு அதில் சிறு கீரை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மேலோடு நீக்கி சுத்தம் செய்த ஆமணக்கின் பருப்பு ஐந்துபலம் லிங்கம் அரை கழஞ்சு அத்துடன் சேர்த்து கல்வத்திலிட்டு மெழுகு பதத்தில் அரைத்தெடுத்து சிமிழில் பத்திரப்படுத்தி எடுத்துக்கொள்ளவேண்டும்.

சிமிழியிலுள்ள மருந்திலிருந்து குன்றியளவு எடுத்து பனைவெல்லத்துடன் சாப்பிட வாந்தியும் மூன்று தடவை பேதியும் உண்டாகும். வாந்தியினால் பித்தம் வெளியேறும். கை கால் கழுவ வென்னீரை பயன்படுத்தவேண்டும். இச்சமயம் தூங்க வேண்டாம் தயிர், பாசிப் பயறு சேர்ந்த சாதம் சாப்பிடவும். பின்னர் இரவு சுக்கு கஷாயம் குடிக்கவும்.

குன்மம், கழலை, புற்றுவாய்வு முதலான நோய் நீங்க

முருங்கை வேர், குவர், கல்லுப்பு மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து விளாங்காயளவுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

தாம்பிரம் காசு எடைக்கு எடுத்து முன்னர் அரைத்ததை அதன்மேல் கவசம் செய்து புடம் போடவும் முருங்கை விதை நான்குபடி முருங்கை வேர்ப்பட்டை நாலுபலம் இவற்றை கைமு¬,,,, தைலமாக்கி தாம்பரத்தை குப்பை மேனிச்சாற்றினால் இருபத்து நான்கு ஜாமம் அரைத்துக்கொள்ளவேண்டும். அதன்பின்னர் எலுமிச்சம்பழச்சாற்றால் அரைத்து மெழுகு பதமானதும் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தாமிரத்தை உருக்கும்போது உருகிவரும் சமயம் முன்னற்கூறிய மெழுகு பதத்தில் அரைத்ததை கொஞ்சம் கொஞ்சமாக அதில்போட்டால் தாமிரம் கட்டும் பின்னர் தாமிரத்தின் எடைக்கு நிளையைச் சேர்த்து இந்த இரண்டின் எடைக்கு சமமாக இரசம் சேர்த்து பொற்றிலைக் கையான்சாறு விட்டு அரைக்கவேண்டும். இதனை மூன்று நாட்கள் அரைத்தெடுத்து சிறுவில்லைகளாக செய்து உலர்த்திக் கொள்ளவும்.

உலர்ந்த வில்லைகளை எடுத்து ஒரு குகையில் வைத்து மேலே நன்கு மூடி சீலைமண் செய்து மண்ணைத்தோண்டி அந்தக்குழியில் புடத்தைப்போட்டு எடுத்து ஆறியதும் அதனை கல்வத்திலிட்டு பொற்றிலை கையான் சாறுவிட்டு இரண்டு சாமம் அரைத்து சிறு வில்லைகளாகத்தட்டி உலர்ந்ததும் முன்னர்போன்றே குகையில் வைத்து புடம்போட வேண்டும். இதுபோன்று ஐந்து தடவைகள் புடம் போட்டு எடுத்துக்கொள்ளவேண்டும்.

எடுத்துப்பார்த்தால் தாமிரம் செந்தூரமாகி இருக்கும். செந்தூரமாகாவிட்டால் மீண்டும் செந்தூரம் ஆகும் வரைபுடம் போட்டுஎடுக்கவேண்டும் நிலைக்கரையான் சாறு விட்டரைத்தல் வேண்டும் இந்த செந்தூரம் சூரியன் நிறத்தைப்போலிருக்கும் செந்தூரத்தை எடுத்ததும் அக்னி தேவன் வைரவர் சிவபெருமான் இவர்களுக்கு பூசை செய்துவிட்டு இதிலிருந்து குன்றியெடை எடுத்து தினம் சாப்பிடவேண்டும். இதுபோன்று நாள் பத்தியெட்டு நாட்கள் சாப்பிட்டால் தாது விருத்தியுண்டாகும்.

அதுமட்டுமின்றி மூலநோய்கள், குன்மம், கழலை, புற்றுவாய்வு போன்ற நோய்களெல்லாம் குணமாகும்.

இதனை ஒரு மண்டலம் சாப்பிட்டால் கடுமையான நோய்க ளெல்லாம் காணமால் போய்விடும். சிவயோகத்தில் மூழ்கினால் அவர்களுக்கு நந்திதேவர் காட்சியளிப்பார்.

என்றும் இளமையுடன் இருக்க

பொன்னாங்கண்ணிச்சாறு நாலுபடி, செவ்விளநீர் நாலுபடி, பொற்றிலைக் கையான் நெல்லி அல்லி, கரிசாலை, எலுமிச்சம்பழம் ஆகிய இவைகளின் சாறு வகைக்கு இரண்டு படி எள்ளெண்ணெய் இரண்டுபடி ஆகியவற்றுடன் பசுவின்பால் இரண்டுபடி இவைகளையெல்லாம் ஒருதைலப்பாண்டத்தில் விட்டுக் கொள்ளவேண்டும்.

பின்னர் சாதிக்காய், லவங்கப்பட்டை, கோஷ்டம், தாமரை வளையம், சிறுநாகப்பூ, சாதிப்பத்திரி , மஞ்சள், சிறு தேக்கு, கண்ட திப்பிலி, மேற்கண்ட இந்த சரக்குகளில் வகைக்கு ஒரு கழஞ்சு வீதம் எடுத்து சேர்த்து மைபோல அரைத்துக்கொண்டு அதனை தைலபாண்டத்தில் போட்டு நன்கு கரைத்து அடுப்பிலேற்றி காய்ச்ச வேண்டும் மெழுகு பதத்திற்கு வந்தது வடித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தத் தைலத்தால் அகலாத நோய்களெல்லாம் அகன்றுவிடும். சுரம், காசம், மாந்தை, விக்கல், பிரமை, பித்தம், பிலகள், கண் வியாதி, மூலம், அதிவேர்வை, அதி தாகம், அரோசிகம் போன்ற நோய்களும் குணமாகும் தாது புஷ்டி உண்டாகும்.

மேலும் தாது கெட்ட உடல் பலஹீனமாகி உடல்நலம் குன்றி கபால சூடு, கடுமையான நோய்கள், வாதம், பித்தம், சிலேத்துமம் எனும் முத்தோஷங்கள், வாய்வுபோன்ற நோய்களெல்லாம் குணமாகும்.

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 2

Leave A Reply