சிந்தனைக் களம் 13 – Bamini Rajeswaramudaliyar

Share

நேர்மையாக வாழ்வது வேறு, நேர்மைபோல் காட்டி மற்றவரை நம்ப வைத்து வாழ்வது வேறு.

பிரபஞ்சம் அதற்கு சாட்சி.

பிரபஞ்சத்தற்கு கண்ணில்லை. காதில்லை.

பிரபஞ்சம் என்பது உங்களை வேவுபார்க்கும் ஒற்றரும் அல்ல.

பிரபஞ்சம் என்பது எதிரொலிக்கும் தன்மை கொண்ட சக்தியிலான வெற்றிடம்.

உங்கள் சிந்தனைகள், பேச்சுக்கள் செய்கைகள் என்பன சுவரில் எறிந்த பந்தைப்போல் உங்களுக்கே மீண்டும் வந்து சேர்கிறது.

இதுவே உண்மை.

“நீங்கள் பிபஞ்சத்திற்கு கொடுப்பதுமதான் உங்களுக்கு திரும்பி வருகிறது”

இந்த உண்மையை உணர்ந்தால், எதிர்கால கஷ்டங்களை தவிர்க்க உண்மையாக ,நேர்மையாக மனச்சாட்சியுடன் வாழப் பழகுவீர்கள்.

சில நல்ல மனிதர்கள் கஷ்டப்படுவதும் உண்டு. காரணம் அவர்களது எதிர்மறை சிந்தனைகளே ஆகும்.

அப்படி நடந்து விடுமோ, இப்படி நடந்து விடுமோ என கற்பனைகளை செய்து அஞ்சுவது,
அடுத்தவரின் கஷ்டங்களை பற்றி கவலைப்பட்டு பேசுவது,
அடுத்தவர்களின் நோய்களை பற்றி பேசி வேதனைப்படுவது என்பன
உங்களுக்கே மீண்டும் வந்துவிடுகிறது.

கொடுப்பதையே திரும்பித் தரும் பிரபஞ்சத்திற்கு நீங்கள் அடுத்தவரைப் பற்றி பேசுகிறீர்களா அல்லது உங்களைப் பற்றி பேசுகிறீர்களா என்ற பேதம் தெரியாது.

கிளிப்பிள்ளை போல், குரங்கைப்போல் கொடுப்பதை திரும்பத் தருகிறது.

அவ்வளவுதான்.

அதனால் எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து அனைவரும் சுகமாக உடல் மன நலத்துடன் வாழ்கிறார்கள் என கற்பனை செய்யும் போது அந்த சக்தி நோயாளிக்கும் சென்றடைந்து சுகம் பெற உதவும்.

அந்த சக்தி உங்களையும் வந்து சேரும்.

எதிர்மறை சிந்தனையை நேர்மறையாக்க பயிற்சி செய்யுங்கள்.

முயற்சி திருவினையாக்கும்.

முக்கிய குறிப்பு-

எந்த சிந்தனையிலும் பரிசுத்தம்( good intention) வேண்டும்.

அல்லது வஞ்சகமான உள்ளுணர்வின் பலனே எம்மை வந்து சேரும்.

அதனால்தான் நேர்மையாக வாழ்வது வேறு, நேர்மை போல் நடிப்பது வேறு என்பதன் வேறுபாட்டை அறிவது அவசியமாகும்.

சிந்திக்கவும்!

நன்றி

சிந்தனைக் களம் 14 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply