சிந்தனைக் களம் 15 – Bamini Rajeswaramudaliyar

Share

பழக்கதோஷம் என்பது எமக்கு நாம் உருவாக்கும் சிறையாகும்.

சிறையினுள் இருந்து கொண்டு உலக அறிவை பெறுவது என்பது குதிரைக் கொம்பாகும்.

உலக அறிவு ( புத்தகக் கல்வி அல்ல) புரிந்துணர்ந்தல், எதனையும் துணிந்து கற்கும் பயிலும் ஆர்வம், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை என்பன மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழியினைக் காட்டும்.

நான் இப்படித்தான் என்ற பிடிவாதம் அறிவீனமா அல்லது சோம்பேறித்தனமா என சிந்திக்கிறேன்.

தனக்கு நன்மைதராத எதிர்மறை சிந்தனைகளை மாற்றுவதற்கு பிடிவாதம் எதற்கு?

என்னை நான் மாற்றவும் மாட்டேன்.

முறைப்பாடு செய்வதை நிறுத்தவும் மாட்டேன். ஆனால் நிம்மதியான, மகிழ்வான வாழ்க்கை வேண்டும் என்பது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை போல் தோன்றவில்லையா?

இவைகள் வெறும் அறிவுரைகள் அல்ல.

நான் முயன்று, பயிற்சி செய்து நடமுறையில் செய்வதைத்தான் வழிநடத்தலாக கூறுகிறேன்.

உங்களிடம் அதிகம் கேட்கவில்லை. சிந்தனைகளை மட்டும் நேர்மறையானதாக, ஆக்கமுள்ள சிந்தனையாக்க கேட்கிறேன். காலப்போக்கில் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் வருவதை உணர்வீர்கள்.

உதாரணமாக-
மறக்கக் கூடாது – ஞாபகம் வைத்திருங்கள்.

நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்- சுக நலத்துடன் வாழ வேண்டும்.

வேகமாக நடக்காதீர்கள் விழுந்து விடுவீர்கள்- பார்த்து காலை ஊன்றி நடவுங்கள்.

போன்றவாறு பலதையும் நேர்மறையாக மாற்றி பேசப் பழகுங்கள்.

அத்துடன் நேர்மறையான பகல்கனவுகளையும் காணுங்கள்.

அவை தியானம் போன்றது.

நீங்கள் சரியான முயற்சியுடன் உடல் மன நலன்களை பேணி நகர்ந்து செல்ல, காலம் கனிய கனவுகள் கைகூடும்.

அனுபவம் பேசுகிறது.
அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.
நன்றி

சிந்தனைக் களம் 16 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply