சிந்தனைக் களம் – 26 – Bamini Rajeswaramudaliyar

Share

தமிழ் அழகான மொழி.

தமிழ் மொழியில் அல்லது எந்த மொழியானாலும் சரி கூறப்படும் கதைகள், கூற்றுக்கள், புராணங்கள் போன்ற பல விடையங்கள் பல அர்த்தங்களை கொண்டது.

ஒவ்வொரு விடையத்தையும் தெளிவாக புரியவைக்காமல் விட்டால் அது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, தீமைகளுக்கு வழி அமைக்கும்.

உதாரணமாக

கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார்கள்.

சந்தர்ப்பங்கள் நன்மையானதாக, தீமை விளைவிப்பதாக, நேர்மறை/ எதிர்மறையாக எதுவாகவும் இருக்கலாம்.

கெட்டவனுக்கு தனியே வரும் பெண் நல்ல சந்தர்ப்பம்.

காதல் எனக் கூறி பெண்களின் உடலை அனுபவிக்கத் துடிப்பவர்களுக்கு, மனவலிமை குறைந்த பெண் நல்ல சந்தர்ப்பம்.

மூளை வளர்ச்சி குறைந்தவர் தன் கையில் உள்ள பணத்தை/ பரிசுகளை கொடுத்தால் மனச்சாட்சி அற்றவர்களைக்கு நல்ல சந்தர்ப்பம்.

அவர்கள் அடுத்தநேர செலவுக்கு என்ன செய்வார்கள் என சிந்திக்கத் தெரியாதவர் மிகவும் மோசமான பிறவியாகும்.

தன்மீது அன்பு காட்டுபவர்களை உதவிக்காகவும் பணத்திற்காகவும் பயன்படுத்துதல் சுயநலவாதிக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம்.

இவைகள் சரியானதுதான?

சிந்திக்க வேண்டும்!

எந்த சூழலிலும் தன்மானத்தை காத்து, சுயமரியாதையை உணர்ந்து, பணத்தைக் கண்டும் மயங்காமல் நடப்பவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தத் தெரியாத மூடர் அல்லர், மனச்சாட்சி உள்ள நல்ல மனிதர்கள்.

இதனை தெளிவாக புரிந்து கொள்ளுதல் நல்ல மனிதராக வாழ வழிவகுக்கும்.

தீயமனம் பேராசை உள்ள சந்தர்ப்பவாதிகள், நல்ல கூற்றுக்களை மேற்கோள் காட்டி தவறுகளை/ அடுத்தவரைக்கு அநீதி விளைவிக்கும் செயல்களை இலகுவாக செய்கிறார்கள்.

முகப்புத்தகத்தில் பலவிதமான பதிவுகளை காண்கிறேன். சில சமயங்களில் பிழையான அர்த்தப்படுத்தலுடனான பதிவு கவலையை தருகிறது அத்துடன் அவர்களின் மனநிலையையும் புரிந்து கொள்கிறேன்.

சில சமயங்களில் பதில் கூறத் தோன்றுகிறது வேறு சமயங்களில் கூறி என்ன பயன் என்ற சலிப்பும் எட்டிப் பார்க்க முனைகிறது.

அன்புள்ளங்களே!

சிந்திக்கலாமே!

நல்ல மனிதராக வாழ முயற்சி வேண்டும். காலப்போக்கில் இது இரத்தத்தில் ஊறிய பழக்கமாகி அது நீங்களாகி விடுவீர்கள்.

தீயவராக வாழ முயற்சி தேவையில்லை, பழிகளை அடுத்தவர் மீது சுமத்தி, தம்மை நல்லவராக காட்டி நடித்து வாழ்ந்துவிடலாம்.

பொய் கூறுவதில் வல்லமை இருந்தால் போதும்.

ஆனால் நீங்கள் கொடுப்பது உங்களுக்கே திரும்பி வரும்.

அப்போது யாரைப் பழி கூறியும் பலன் இல்லை. வலியை அனுபவிக்கப் போவது நீங்கள்தான்.

சிந்திக்கவும்!
நன்றி

சிந்தனைக் களம் – 27 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply