ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் நீரைப் போன்ற குளிர்மையும், நெருப்பை போன்ற கடுமையும் இயற்கையான பிறப்புரிமையாக அமைந்துள்ளது.
இவைகள் இரண்டையும் சரியானபடி நேரம்/காலம் அறிந்து,
எங்கே எப்படி பயன்படுத்துவது என்ற அறிவே மனிதனின் வாழ்வின் நிம்மதி, சந்தோஷம்,வெற்றியின் இரகசியமாகிறது.
ஆனால் வளரும் சூழலும் கலாச்சாரமும் இவை இரண்டையும் பிரித்து ஆணை நெருப்பாகவும் பெண்ணை நீராகவும் மாற்றி வளர்ப்பதன் விளைவு, இவர்கள் தம்மைத்தாம் அறிய முடியாமல் ,தம்பலத்தை இழந்து.
இருபாலரும் மனப் போராட்டத்திற்குள்ளாகி இப்படித்தான் வாழ வேண்டும்போலும் என்ற நிச்சயமற்ற தன்மையுடன் கேள்விக் குறியாக வாழ்கிறார்கள்.
இருபாலரும் உணர வேண்டிய விடையம் அன்பு என்பது கோபத்தை விட பலமுள்ளது. பயம் இருக்கும் இடத்தில் அன்பு வளர்வதில்லை.
ஆணவத்துடன் கூடிய அதிகாரம் அவமானத்தை மட்டுமே தேடித்தரும்.
இருபாலரும் அவசியமான போது சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும், பேசுவதை கேட்க வைப்பதற்கும் உறுதியான குரலுடன்(firm vice) பேசலாம்.
அது தர்க்கம் அல்ல.
கோபம் வரமுன்பு சரியான நடவடிக்கையை எடுக்க வேண்டுமே அன்றி பிரச்சனை முற்றிய பின் சத்தம் போட்டு/அடுத்து /உதைத்து பயனில்லை.
அது அவர்களின் பலயீனத்தைத்தான் காட்டுகிறது.
கோபம் என்பதை, சத்தம் போடுவதன் மூலமும் அல்லது physical violence மூலமும் காட்டி மற்றவரை அடக்கியாள முனைவர் தன்னை பண்பற்றவராகவும் பலயீனமானவராகவும் பிரகடனப்படுத்துகிறார்.
சிந்திக்கவும்!
அன்புள்ளங்களே!
இருபாலாருக்குள்ளும் ஆணுக்குள் பெண்மையும், பெண்ணுக்குள் ஆண்மையும் அவசியம்.
இதுவே மனத் திருப்தி தரும் வாழ்வின் இன்னுமொரு இரகசியமாகும்.
பயந்து வாழும் வாழ்வில் நிம்மதி இருப்பதில்லை.
சிந்திக்கவும்.
அன்புள்ளங்களே!
வாழ்க்கை என்பது இரசாயனக் கலவை போன்றது.
உண்மை, நேர்மை, அன்பு, போபம், இரக்கம், கருணை போன்றவற்றை எதனை, எப்படி, எந்த சூழலில், எந்த அளவு கலக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழ்வதுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த சமநிலையை புரிந்து கொண்டவர்கள் பிரச்சனைகளை தவிர்த்து, நிம்மதியாக வாழ்கிறார்கள்.
பயிற்சியும் முயற்சியும் பலனைத் தரும்.
சிந்திக்கவும்.
அனுபவம் பேசுகிறது.
நன்றி