தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர் எழுதும் புதிய தொடர்

Share

1. இலங்கையின் பொருளாதார பேரிடர் –

மலையகப் பெண்களின்  நிலை

இந்தியப் பெருங்கடலில் மறைந்திருக்கும் அழகிய இரத்தினம் என்று வர்ணிக்கப்படுகின்ற இலங்கை தேசம் சுமார் 30-வருடங்களை விடுதலை வாழ்வை அனுபவிக்கவில்லை. காரணம் 1983 ம் ஆண்டு முதல் நடைபெற்ற உள்நாட்டுப்போர் முடிவுற்ற தசாப்தங்களைத் தாண்டிக் கட.த 2009 மே மாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இருதரப்பிலும் லட்சக்கணக்கான உயிர்காவு கொள்ளப்பட்டது. நாடு கடந்து போனார்கள் காணாமல் போனார்கள் இந்நிலையில் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல் 2019 ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சம்பவித்த தொடர் குண்டு வெடிப்பு 5௦௦-க்கு மேற்பட்டோர் உயிரிழந்து அங்கவீனமானார்கள்.

இதன் நிமித்தமாக நீண்ட காலமாக யுத்தம் பின்வந்த உயிர்த்த ஞாயிறின் எதிர்பாராத குண்டு வெடிப்பில் திணறியது. அதன் நிமித்தமாக இலங்கைக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

சுமார் 10 வருடங்களாக அசுர. வளர்ச்சியினை நோக்கிப் பயணித்த இலங்கையை மீண்டும் கொரோனா கொள்ளைநோய் சீர்குலைத்தது.ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரத் திட்டச் சீர்குலைவினாலும் இலங்கை கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. இப்போது அண்மைய நாடுகளிடம் கையேந்தும் நிலையில் ஏராளமான கடன் வெளிநாட்டுச் சுற்றுலாத் துறையின் வருகை குறைந்தநிலையிலும் இங்கு அந்நியச் செலாவணி தட்டுப்பாடு சுற்றுலா தளங்களின் மூடல் முதலான காரணங்களால் இலங்கை மேலும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

மட்டுமல்ல உக்ரைன் ரஷ்யப் போரினால் எல்லா பக்கமும் நெருக்கப்பட்ட சூழலில் மக்கள் இலங்கையில் எங்கெல்லாம் தெருக்கள் உள்ளதோ அங்கெல்லாம் இறங்கிப் போராடவும் கலவரத்தில் அரசுக்கு எதிராக செயற்படவும் நாட்டு தலைமை அரசாங்கத்தை விட்டு வெளியேறவும் கோத்தா கோ கம மக்களிடம் சமையல் எரிவாயு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்தோடு இணைந்த அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் சாதாரண மக்களுடைய வாழ்வைச் சீர்குலைக்க, இதில் இலங்கையின் மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் வாழ்வும் பெரிதும் இக்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருக்கும் வரையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் இல்லாத பஞ்சம் இலங்கை இலங்கையைக் கவிழ்த்துப்போட்டுள்ளது. 1972ம் ஆண்டு சிறீமா அரசாங்கத்தால் உள்ளூர் உற்பத்தியினால் தன்னிறைவு என்றதான தொனிப்பொருளில் ஆன வேலைத்திட்டங்கள் தன்னிறைவு அடையாத இந்தியாவிலிருந்து அடிமையாகக் கொண்டுவரப்பட்டு மலையகத்தில் குடியேற்றப்பட்டு தேயிலை கூலித்தொழிலாளர்கள் வாழ்வும் மட்டும்தான் தன்னிறைவு என்பது இன்று வரை அடையவேயில்லை.

ஓர் இறாத்தல் பாணுக்காக வரிசையில் நின்றதும் சோறு சமைக்க முடியாத அரிசியை தோட்ட தொழிற்சாலை. மலையக மக்களுக்கு ஒரு கொத்து அரிசி என்ற அடிப்படையில் வழங்கினர்.

மக்கள் அரைவயிற்றுக்குக் கஞ்சியும் பல குடும்ப அங்கத்தவர்கள் வீட்டில் பெண்கள் கஞ்சியும் இன்றி வெறும் தண்ணீரைக் குடித்தும் பிழைத்தனர். என்னுடைய தோட்டத்தில் வறுமையில் மிகவும் உழன்ற ஒரு குடும்பம் இரவு உணவாக கரும்பைச் சாப்பிட்டு இன்றும் ஓர் உண்மைச் சம்பவமே.

அப்போதைய பிரதமர் சிறீமா வோ பண்டாரநாயக்கா அவர்கள் உள்ளூர் உற்பத்தியில் தன்னிறைவு என்ற கொள்கையிலே இந்நிலை இவ் மலையக மக்களுக்கு ஏற்பட்டது.சிங்கள மக்கள் பலாக்காய் (கொஸ்) மரவள்ளிக் கிழங்கு வற்றாளை முதலான கிழங்குகள் உள்ளூர் உற்பத்திக்கான வயிற்றை நிரப்பியது.ஆகவே இந்த நெருக்கடியில் திண்டாடி திணறுவது மலைய மக்கள் அதிலுமே மலையகத்தில் நலிவுற்று நிற்கும் பெண் தொழிலாளர்களே.

வாகனங்களுக்கு எரிபொருள் அற்ற நிலையில் இரவு பகலாக வாகனங்கள் எரிபொருள் வரிசையில் காத்திருந்து தத்தளிக்கு மக்கள் 10.மணி முதல் 14 மணித்தியாலம் வரையான மின்சார வெட்டு இவ்வாறானை இக்கட்டான சூழலில் நாடு அகப்பட்டுக்கொண்டது. ஏற்கனவே மிகவும் நலிந்த நிலையில் வாழும் பெ.புந்தோட்டமக்கள் இன்னும் விளிம்பு நிலைக்குப் பின்தள்ளப்படுகிறார்கள். ஏற்கனவேதத் குழந்தைகள் மந்தப் போசாக்கும் சரியான உணவுப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் இவ் பொருளாதார சிக்கலில் மேலும் மந்தப்போசாக்கான நிலைக்கே கொண்டு செல்கிறது.

தேயிலைக்காரி – 2 – மலையக எழுத்தாளர் எஸ்தர்

Leave A Reply