வாழ்வியல் சிந்தனைகள் – 44 – ராதா மனோகர்

Share

சகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும்

ஒரு சம்பவம் நிகழும் முன்பாக அந்த சம்பவம் நிகழ்வதற்கு அத்திவாரமாக பல சம்பவங்கள் நடை பெறுவதை நாம் கவனித்திருப்போம்.

உதாரணமாக மழை வரும் சில நேரத்திற்கு முன்பாக வானம் மேகமூட்டமாக இருந்திருக்கும்.

எம்மை சுற்றி நடக்கும் சகல சம்பவங்களுக்கும் எமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும். அது மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் சகல நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவையே.

நடைபெறும் சம்பவங்களை கோர்வை படுத்தி உற்று அவதானித்தால் இந்த பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை ஓரளவு ஊகிக்க முடியும்.

Science of Events. அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களை கவனித்து ஓரளவு அதன் மூலம் எதிர்கால சம்பவங்களை அறிய கூடிய ஆற்றல் மனிதர்களுக்கு காலம் காலமாக இருந்திருக்கிறது.

ஆனால் அந்த அறிவுக்கு நவீன விஞ்ஞானம் உரிய அந்தஸ்தை அளிக்க வில்லை. அதன் காரணமாகவே அந்த விஞ்ஞானம் சோதிடம் சார்ந்த கலையாக அடையாளப்படுத்த படுகிறது.

உண்மையில் அது ஒரு Quantum Mechanism தான்.

இங்கே நான் சம்பவங்கள் என்று குறிப்பிடுவது எம்மை சுற்றி நடக்கும் சகல சம்பவங்கள் மட்டுமல்ல, எமக்கு உள்ளே எமது மனதிற்கு நடக்கும் எண்ணங்களையும் சேர்த்து தான் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விஞ்ஞானத்தை அறிந்த பல சோதிடர்கள் நடக்க இருக்கும் சம்பவங்களை சில வேளைகளில் சரியாகவே சொல்கிறார்கள். ஆனால் என்ன அவர்கள் பெரும் பாலும் இந்த விஞ்ஞானத்தை ஏதோ ஒரு தெய்வீக அருள் போன்று பாவனை பண்ணுகிறார்கள்.

இந்த Science of Events என்ற புதிய கருத்து விஞ்ஞானிகளிடையே தற்போது ஓரளவு ஏற்று கொள்ளபடுகிறது.

வாழ்வியல் சிந்தனைகள் – 45 – ராதா மனோகர்

Leave A Reply