வாழ்வியல் சிந்தனைகள் – 60 – ராதா மனோகர்

Share

Intellectual laziness சாமியார்கள் குருமார்கள் வழிகாட்டிகள்

All these godman, gurus and flunkies are offering us a new oasis. You will find out that it is no different from other mirages. .U,G,Krishnamurthi

சதா குரு பக்தி! அளவிட முடியாத நம்பிக்கை…போன்ற போதை வஸ்துக்களை ஏறக்குறைய எல்லா சாமியார்களும் எல்லா சமய குருமார்களும் சதா போதித்த வண்ணமே உள்ளனர். இதில் உள்ள மர்மம் தான் என்ன?

வேறொன்றும் இல்லை இந்த குரு பக்தி ரசிகர்மன்றங்கள் தங்கள் வாழ்க்கையை வசதியாக கொண்டு செல்ல இந்த நம்பிக்கை என்ற மோசடிதான் காலா காலமாக கையாளும் தந்திரமாகும்.

சிலர் நிஜமாகவே இந்த கண்மூடி தனமான நம்பிக்கை நல்லது என்று நம்புகின்றனர் . ஆனால் அடிப்படையில் இது ஒரு தற்காலிக ஏற்பாடாக அல்லது ஒரு திரபி என்று எடுத்து கொள்ளலாமே தவிர இது ஒரு சரியான வழி என்று கொள்ளவே முடியாது.

இந்த குருட்டு நம்பிக்கைதான் மனிதகுலம் முழுதும் பல பயங்கர அழிவுகளுக்கும் மோசடியகளுக்கும் காரணமாக இருந்து இருக்கிறது.

மனிதர்களை சுயமாக சிந்திக்க விடாது தமது காரியத்தை சாதித்து கொள்ளும் சாமியார்கள் குருமார்கள் வழிகாட்டிகள் போன்றோர் சதா குரு பக்தி போன்ற ரசிகர்மன்ற வியாதிகளை பரப்பும் துஷ்டர்களாக இருக்கின்றனர்.

இன்று பிரபலமான ஒரு குரு அல்லது சாமியார் அல்லது வழிகாட்டி என்றால் அவரிடம் விமானங்கள் முதல்கொண்டு ஏராளமான சொத்துக்கள் இருக்கும். கேட்டால் அவற்றிக்கும் ஏதாவது பித்தலாட்ட பதில்களை வைத்திருப்பார்கள். அவர்களின் சீடர்களிடமோ பேசவே முடியாது. நன்றாக மூளை கழுவப்பட்டு தமது குரு/ரசிகர் மன்ற வழிகாட்டியை எல்லை கடந்து பாதுகாப்பார்கள். இந்த மாதிரி பாமர மக்கள் உண்மையில் மிகவும் பரிதாபத்திற்கு உரியவர்கள்தான்.

தமது சுய புத்தியை பாவிக்க மறுத்து சதா எதோ ஒரு முடிச்சவிக்கியின் பின்னால் படித்தவர் படிக்காதவர் பேதமின்றி தமது வாழ்வின் பெரும் பகுதியை வீணாக விரயமாக்குகிறார்கள்.

இவர்களை சுயமாக சிந்திப்பது பாப கரமான செயலென்றும் எந்த கேள்வியும் கேட்காமல் நம்புவதே புண்ணியம் என்றும் நம்ப பண்ணிவிட்டார்கள்.

இது ஒரு சிந்தனை சோம்பேறிதனம் என்று இவர்களுக்கு புரிய வைப்பது மகா கடினம்.

வாழ்வியல் சிந்தனைகள் – 61 – ராதா மனோகர்

Leave A Reply