புல்லும் புல்புல்லும் – Fazil Freeman Ali

Share

முக‌நூல் ந‌ண்ப‌ர்க‌ளான‌ ப‌சுவுக்கும் புலிக்கும் இடையே க‌டுமையான‌ வாக்குவாத‌ம். சுற்றிலும் ப‌ல‌ மிருக‌ங்க‌ளும் நின்று வேடிக்கை பார்த்த‌ன‌…

ப‌சு சொல்லிற்று, “இது என் உண‌வு, என்னைவிட‌ உன‌க்கு பெருசா என்ன‌ தெரியும்ணு குதிக்கிறே. புல்லோட‌ நிற‌ம் ஆர‌ஞ்ச்”

புலி த‌லைல‌ அடிச்சுக்கிச்சு, “அடேய், நீ எங்கேயோ காஞ்சுப்போன‌ புல்லை பாத்திருப்ப‌. உன்னோட‌ ப‌சி ம‌ய‌க்க‌த்தில் அது ஆர‌ஞ்ச் க‌ல‌ர்ல‌ தெரிஞ்சிருக்கும். ஆனா புல்லோட‌ அச‌ல் நிற‌ம் ப‌ச்சை. லூசு மாதிரி பேசிட்டு திரியாத‌”

வாக்குவாத‌ம் விடாம‌ல் தொட‌ருது…

“இல்லை, புல்லின் நிற‌ம் ஆர‌ஞ்ச் என்ப‌து என் ந‌ம்பிக்கை. என்னோட‌ ம‌ன‌ச‌ புண்ப‌டுத்துறே நீ, உன்ன‌ என்ன செய்றேன் பாரு”னு சொன்ன‌ ப‌சு நேரா முக‌நூல் ந‌டுவ‌ர் சிங்க‌த்திட‌ம் போய் முறையிட்ட‌து. கூட‌வே போன‌து புலியும்.

இரு த‌ர‌ப்பு வாத‌த்தையும் கேட்ட‌ சிங்க‌ம், ப‌சுவை பார்த்து கேட்ட‌து, “புல்லின் நிற‌ம் ஆர‌ஞ்ச் என்று நீ உண்மையிலேயே ந‌ம்புகிறாயா..?”

“ஆமாங்க‌ எச‌மான், க‌ண்டிப்பா ஆர‌ஞ்ச் தான். இது பார‌ம்ப‌ரிய‌மா எங்க‌ ந‌ம்பிக்கை”னு அடிச்சு சொல்லிச்சு ப‌சு.

“நீ உண்மையிலேயே அப்ப‌டி ந‌ம்புவ‌தானால், புல்லின் நிற‌ம் ஆர‌ஞ்ச் தான்”னு சிங்க‌ம் சொன்ன‌தும் ப‌சுவுக்கு பேரான‌ந்த‌ம்.

“த‌ர்ம‌த்தின் வாழ்வுத‌னை புலி க‌வ்வும், இறுதியில் ப‌சு வெல்லும். இது எங்க‌ள் ந‌ம்பிக்கைக்கு கிடைத்த‌ வெற்றி”னு மைக் இல்லாம‌லேயே பொள‌ந்து க‌ட்டிச்சு. சுத்தி நின்ன‌ ப‌சுக்க‌ளும் கைத‌ட்டி ஆர்ப்ப‌ரிச்சுது.

“ஆனால் இதும‌ட்டும் போதாது மை லாட், இந்த‌ முட்டாள் புலிக்கு த‌ண்ட‌னையும் குடுக்க‌ணும்”னு கோரிக்கை வெச்சுச்சு.

“புலி மூன்று நாட்க‌ள் முகநூலில் பேச‌க்கூடாது” என்று தீர்ப்பான‌து. ப‌சு கெக்கப்பிக்கேனு சிரிச்சிட்டே ஓடிப்போச்சு…

புலிக்கு ஏக‌த்துக்கு டென்ஷ‌ன் ஏறிப்போச்சு. மெதுவா சிங்க‌த்துக்கிட்ட‌ போய் கேட்டுச்சு, “என்ன‌ங்க‌ இப்ப‌டி தீர்ப்பு குடுத்துட்ட்டீங்க‌…? உங்க‌ளுக்கு ந‌ல்லா தெரியும் புல்லோட‌ நிற‌ம் ப‌ச்சைனு. அந்த‌ ப‌ய‌தான் கேன‌த்த‌ன‌மா உள‌றுறான்னா நீங்க‌ளும் அவ‌னுக்கு ச‌ப்போட் செய்றீங்க‌ளே. உண்மை சொன்ன‌ என‌க்கு த‌ண்ட‌னைவேற‌ குடுத்துட்டீங்க‌. இதெல்லாம் ந‌ல்லாவாங்க‌ இருக்கு..? எல்லாருக்கும் மார்க் போடுற‌ பெரிய‌ ம‌னுச‌ன், நீங்க‌ளே இப்ப‌டி ப‌ண்ணலாமா..?”

சிங்க‌ம் ஹ‌ ஹ‌ ஹா-னு சிரித்துக்கொண்டே சொன்ன‌து, “அடேய்… உன‌க்கு த‌ண்ட‌னை குடுத்த‌துக்கும் புல்லோட‌ நிற‌த்தும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்ல‌…”

“அப்புற‌ம் ஏனிந்த‌ த‌ண்ட‌னை…?” புரியாம‌ல் கேட்ட‌து புலி.

“அதுதான் லூசுத்த‌னா அறிவில்லாம‌ல் க‌ற்ப‌னை உல‌கில் வாழுதுன்னு தெரியுதுல்ல‌. அது தெரிஞ்சும் நாள் முச்சூடும் அதுக்கிட்ட‌ போய் விவாத‌ம் ப‌ண்ணிட்டிருந்தியே, அதுக்குத்தான் இந்த‌ த‌ண்ட‌னை”

“அறிவுள்ள‌வ‌ன்கூட‌ உன‌க்கு க‌ருத்துவேறுபாடு ஏற்ப‌ட்டா உரையாடு, விவாதி… என்ன‌ வேணும்னாலும் செய். அறிவிலிக‌ள்கூட‌ ச‌க‌வாச‌த்தை குறைச்சுக்க‌. அதுவும் க‌ற்ப‌னாவாத‌த்தில் உழ‌ன்று இல்லாதையெல்லாம் இருக்குன்னு ந‌ம்புற‌வ‌ன்கிட்ட‌ நீ எவ்வ‌ள‌வு எடுத்துச்சொன்னாலும் அவ‌னுக்கு புரியாது. நீ சொல்ல‌ச்சொல்ல‌ அவ‌னோட‌ வ‌ற‌ட்டு வீம்புதான் அதிக‌ரிக்கும்”

“அவ‌ன் சுண்டெலிமேல‌ விநாய‌க‌ர் ச‌வாரி செய்றாரும்பான்; பூமிக்கு வெளியே பிராண‌வாயு இல்லேன்னு தெரிஞ்சும் முக‌ம்ம‌து இற‌க்கை உள்ள‌ குதிரைல‌ ஏழு வான‌த்துக்கும் மேல‌ ப‌ற‌ந்துபோயி அல்லாசாமிய‌ பாத்துட்டு வ‌ந்தாரும்பான்; நாச‌ரேத்தில் பிற‌ந்த‌ ஏசு 2000 வ‌ருச‌த்துக்கு முன்னாடி சிலுவையில் அறைய‌ப்ப‌ட்டு செத்த‌து 20 வ‌ருச‌த்துக்கு முன்னாடி நாக‌ர்கோவிலில் பிற‌ந்த‌ நீ பாவியா இருக்கிற‌தால‌தாம்பான்; புல்புல் ப‌ற‌வைமேல‌ ஏறி சாவ‌ர்க‌ர் சுத‌ந்திர‌த்துக்கு போராடினாரும்பான், இவ‌ன்கூடெல்லாம் ம‌ல்லுக்க‌ட்டி நின்னு விவாத‌ம்ப‌ண்றே பாரு, அது நேர‌ விர‌ய‌ம். அதுக்குத்தான் உன‌க்கு மூணுநாள் ப‌னிஷ்மென்ட்”னு சிங்க‌ம் க‌ர்ஜித்த‌து.

“Do not argue with an idiot. He will drag you down to his level and beat you easily in his home turf”

முட்டாள்க‌ளுட‌ன் விவாத‌ம் செய்யாதீர்க‌ள். ந‌கைத்த‌ப‌டி க‌ட‌ந்து போய்விடுங்க‌ள்.

Leave A Reply