Browsing: அண்ணாவின் கடிதங்கள்

1967 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க அண்ணா மேற்கொண்ட முயற்சிகள்!

தம்பி! நாடெங்கும், வீடெல்லாம் தேர்தல் பற்றிய பேச்சொமேலோங்கி இருந்திட காண்கின்றாய். “சூடும் சுவையும் நிறைந்த பேச்சு’. காரணம் கணக்கு இணைந்த பேச்சு! முன்னாள் இந்நாள் நிலைமை விளக்கம் காட்டும் பேச்சு! அங்கு முன்போல் இல்லை! இங்கு முன்பு இருந்ததைவிட ஆர்வம் அதிகம் என்பனபோன்ற பேச்சுக்கள் எங்கும் ஒலித்துக்கொண்டுள்ளன. உமது கருத்து என்ன? எனக்கு நிலைமை நன்கு புரிந்ததால்தான் இவ்விதம் கூறுகிறேன். எவரெவரிடம் பேசவேண்டுமோ அவர்களிட மெல்லாம் பேசிப் பார்த்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். இன்னின்னார் நம்…

தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகளின் தேசிய இனம் எது? – C.N.Annadurai

எவனோ மொழி விஷயமாக நாலு புத்தகம் படித்தவனை, எல்லா விஷயங்களையும்பற்றி எல்லா ஏடுகளையும் படித்தறிந்து அவைகளை உலகுக்குக் கூறியாகவேண்டுமே என்று துடியாய்த் துடித்துக்கிடக்கும் நான், எப்படி என்னைவிட மேலானவன் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறுவரேல், அவர்கட்குக் கூறுவேன், தம்பி! ஆறடி உயரமுள்ள நோயாளியானாலும் மருத்துவனை நாடும்போது, குறைந்தது ஆறேகால் அடி உயரமாவது இருக்கவேண்டும் என்று தேடமாட்டான் – நாலரை அடி உயரமாக மருத்துவர் இருப்பினும் கவலைப்படமாட்டான். அதுபோலாகிலும் மொழிப்புலமை பெற்றோரின் முடிவுகளை ஏற்கட்டுமே; சின்ன மனிதர்கள் சொல்லும்…

கல்லணை அதிசயமும், நங்கவரம் பண்ணை பிரச்சனையும்! – C.N.Annadurai

காவிரியும் கரிகாலன் கல்லணையும் – நங்கவரம் பண்ணைப் பிரச்சினை தம்பி! கல்லணை! தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்கிய நாட்களை, இன்று நமக்கு நினைவூட்டும் சின்னமாகக் காட்சி அளிக்கிறது. தமிழ் இனத்தின் வீரம் கண்டு சிங்களம் அடிபணிந்த வீரக் காதையும், போரிலே பிடிபட்ட சிங்களவர்களைச் சிறையிலிட்டுச் சீரழிக்காமல், சந்தைச் சதுக்கத்திலே நிற்கவைத்து அடிமைகளாக விலைபேசி விற்றிடாமல், தமிழ் மன்னன், அவர்களைக் கொண்டு, நாட்டுக்குப் பயன் தரத்தக்கதும், என்றென்றும் நிலைத்து நிற்கத்தக்கதுமான “அணை’ கட்டவைத்த கருத்தாழமும், கவினுற விளக்கிடச் செய்கிறது…

நில உரிமைப் போராட்டத்தில் கலைஞருக்கு துணை நின்றவர்!

முன்னாள் முதல்வர் கலைஞர் , முதன்முதலில் குளித்தலை தொகுதியில் நின்று எம்.எல்.ஏ-வாக வெற்றிபெற காரணமாக இருந்தவர் கவுண்டம்பட்டி முத்து (96). இவர் தனது வயதுமூப்பு காரணமாக மரணம் அடைந்தார். “கலைஞரின் நட்பை மட்டும்தான் கடைசிவரை விரும்பினார். பதவிக்கு ஆசைப்படவில்லை!” என்று அவர் குறித்த நினைவுகளை அவருடைய உறவினர்கள் உருக்கமாக தெரிவித்தார்கள். 1957-ல் குளித்தலை தொகுதியில் கலைஞர் தன் முதல் தேர்தலைச் சந்திக்கவும், அங்கே அவர் 8 ஆயிரத்து 296 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவும் இந்த கவுண்டம்பட்டி முத்துதான்…