1967 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க அண்ணா மேற்கொண்ட முயற்சிகள்!
தம்பி! நாடெங்கும், வீடெல்லாம் தேர்தல் பற்றிய பேச்சொமேலோங்கி இருந்திட காண்கின்றாய். “சூடும் சுவையும் நிறைந்த பேச்சு’. காரணம் கணக்கு இணைந்த பேச்சு! முன்னாள் இந்நாள் நிலைமை விளக்கம் காட்டும் பேச்சு! அங்கு முன்போல் இல்லை! இங்கு முன்பு இருந்ததைவிட ஆர்வம் அதிகம் என்பனபோன்ற பேச்சுக்கள் எங்கும் ஒலித்துக்கொண்டுள்ளன. உமது கருத்து என்ன? எனக்கு நிலைமை நன்கு புரிந்ததால்தான் இவ்விதம் கூறுகிறேன். எவரெவரிடம் பேசவேண்டுமோ அவர்களிட மெல்லாம் பேசிப் பார்த்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். இன்னின்னார் நம்…