Browsing: அண்ணா

1967 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க அண்ணா மேற்கொண்ட முயற்சிகள்!

தம்பி! நாடெங்கும், வீடெல்லாம் தேர்தல் பற்றிய பேச்சொமேலோங்கி இருந்திட காண்கின்றாய். “சூடும் சுவையும் நிறைந்த பேச்சு’. காரணம் கணக்கு இணைந்த பேச்சு! முன்னாள் இந்நாள் நிலைமை விளக்கம் காட்டும் பேச்சு! அங்கு முன்போல் இல்லை! இங்கு முன்பு இருந்ததைவிட ஆர்வம் அதிகம் என்பனபோன்ற பேச்சுக்கள் எங்கும் ஒலித்துக்கொண்டுள்ளன. உமது கருத்து என்ன? எனக்கு நிலைமை நன்கு புரிந்ததால்தான் இவ்விதம் கூறுகிறேன். எவரெவரிடம் பேசவேண்டுமோ அவர்களிட மெல்லாம் பேசிப் பார்த்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். இன்னின்னார் நம்…

தமிழ்நாட்டின் எல்லைச் சாமிகள் – ஆதனூர் சோழன்

இருள் கவியத் தொடங்கிய நேரம். அந்தக் கிராமத்தின் எல்லைக்குள் ஒருவன் மூட்டை முடிச்சுகளுடன் நுழைந்தான். அவனை ஒரு உருவம் வழிமறித்தது.. “யார் நீங்க? எந்த ஊர்? இங்கே எதுக்காக வர்றீங்க?” என்றது. “ஐயா, நான் பக்கத்து ஊருதானுங்க. அங்க இருக்கிற மனுஷங்க எல்லோரும் கெட்டவங்களா இருக்காங்க. வாழப் பொறுக்காதவங்களா இருக்காங்க” என்றான் அவன். அவனை அப்படியே திருப்பி அனுப்பியது அந்த உருவம். அடுத்தநாள், இதேபோல இன்னொருவன் அந்தக் கிராமத்து எல்லைக்குள் நுழைந்தான். அவனையும் அந்த உருவம் வழிமறித்தது……

தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகளின் தேசிய இனம் எது? – C.N.Annadurai

எவனோ மொழி விஷயமாக நாலு புத்தகம் படித்தவனை, எல்லா விஷயங்களையும்பற்றி எல்லா ஏடுகளையும் படித்தறிந்து அவைகளை உலகுக்குக் கூறியாகவேண்டுமே என்று துடியாய்த் துடித்துக்கிடக்கும் நான், எப்படி என்னைவிட மேலானவன் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறுவரேல், அவர்கட்குக் கூறுவேன், தம்பி! ஆறடி உயரமுள்ள நோயாளியானாலும் மருத்துவனை நாடும்போது, குறைந்தது ஆறேகால் அடி உயரமாவது இருக்கவேண்டும் என்று தேடமாட்டான் – நாலரை அடி உயரமாக மருத்துவர் இருப்பினும் கவலைப்படமாட்டான். அதுபோலாகிலும் மொழிப்புலமை பெற்றோரின் முடிவுகளை ஏற்கட்டுமே; சின்ன மனிதர்கள் சொல்லும்…

அவமானங்களில் இருந்து தமிழகத்தை மீட்டெடுத்த மு.க.ஸ்டாலின்…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லிவிட்டு நிமிர்ந்து அரங்கத்தை பார்த்தார் ஸ்டாலின். அவருடைய பார்வை தொலைக்காட்சியில் பதவியேற்பை பார்த்துக் கொண்டிருந்த தமிழக மக்களையும் நோக்கியிருந்தது. அந்த தருணத்திற்காகவே காத்திருந்ததைப் போல கூடியிருந்தோரின் கரவொலி அதிர்ந்தது. பார்த்தவர் விழிகளில் பரவசமும், ஆனந்தக் கண்ணீரும் வழிந்தது. 10 ஆண்டுகள் பாழ்பட்டுக் கிடந்த தமிழகத்தை பண்படுத்த ஒருவன் வந்துவிட்டான் என்று தமிழர்கள் பரவசப்பட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த கூத்துகள் அனைத்தும் தமிழகத்தை உலக அரங்கில் மட்டுமல்ல, இந்திய…

2.நீதிக்கட்சி அரசின் சாதனைகளும் பூசல்களும்! – திராவிட இயக்க வரலாறு!

பார்ப்பனரல்லாதோர் மத்தியில் நீதிக்கட்சி பிரபலமானால் பார்ப்பனர்கள் எப்படி பார்த்துக் கொண்டிரு?கக முடியும்? நீதிக்கட்சியின் வளர்ச்சி மட்டும் பார்ப்பனர்களை பதற்றப்படுத்தவில்லை. மாண்டேகு செம்ஸ்போர்டு கமிஷன் அறிக்கையும் அவர்களை பாடாய் படுத்தியது. ஆம், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இந்தியர்களும் ஆட்சி நடத்தும் வகையில் டொமினியன் சர்க்கார் எனப்படும் இரட்டை ஆட்சிமுறையை அமல்படுத்த அந்த அறிக்கை வகை செய்தது. முதல் உலகப்போரில் பிரிட்டனுக்கு இந்திய ராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு அளித்தால் சுயாட்சி உரிமை குறிதது பரிசீலிக்கப்படும் என்று பிரிட்டன் வக்குறுதி…

1. நீதிக்கட்சியின் தோற்றமும் பார்ப்பனர் பதற்றமும்! – திராவிட இயக்க வரலாறு

1916 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்த திலகர், அன்னிபெசன்ட் இருவரும் பிரிட்டிஷ் ஆட்சிக்குள்ளேயே இந்தியர்களுக்கு தன்னாட்சி என்ற வாதத்தை முன்வைத்து ஹோம்ரூல் என்ற தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்கள். பிரிட்டனிலிருந்து இந்தியாவில் குடியேறி சென்னையில் ஆர்ய சமாஜத்தை நடத்தியவர் அன்னிபெசன்ட். தொடக்கத்தில் நாத்திகவாதியாக இருந்த அன்னிபெசன்ட் இந்தியர்களை ஏமாற்ற ஆரிய சமாஜத்தில் இணைந்தார். அவரும் வர்ணாசிரம் கோட்பாடுகளை ஏற்பவராக மாறினார். அதுபோல பாலகங்காதர திலகரும் வர்ணாசிரம கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றுபவர். இருவரும் இணைந்து இப்படி ஒரு இயக்கத்தை தோற்றுவித்ததால்…