அந்த நூறு ஒட்டகங்கள் – Fazil Freeman Ali
அன்வர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ராஜஸ்தான் மாநிலத்தில். ஓரளவுக்கு வசதியான குடும்பம்தான். அன்வர் பிறந்த கிராமம் பாலை நிலத்தை ஒட்டியிருந்ததால் இங்கு யாரும் பெரிதாக விவசாயம் செய்வது கிடையாது. கால்நடைகள் மற்றும் சிறு குறு தொழில்கள்தான் அங்குள்ள மக்களின் பிரதான வாழ்வாதாரம். பால்யம் கடந்து இருபதுகளில் காலடியெடுத்துவைத்த மகனுக்கு பெற்றோர் மணமுடித்து வைத்தனர். சில ஆண்டுகளில் தந்தையானான் அன்வர். வெளிப்பார்வைக்கு எல்லாமே நன்றாக போய்க்கொண்டிருப்பது போல் தோன்றினாலும் அன்வருக்கு எப்போதும் ஏதாவது கவலைகள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.…