அபலைகள் – கல்கியின் கதைகள் – 2
புருஷ சிம்மங்களாகிய நாம் பெண் மயில்களை “அபலைகள்” என்று சொல்கிறோம். ஸ்தீரிகள் தனித் தனியாக இருக்கும்போது அவர்கள் ஒருவேளை உண்மையாகவே அபலைகளாயிருக்கலாம். ஆனால் அவர்களில் இரண்டு பேர் மட்டும் சேர்ந்துவிட்டால் எவ்வளவு பெரிய பெரிய காரியங்களுக்கெல்லாம் காரணபூதமாகிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது அவர்களை “அபலைகள்” என்று அழைப்பது சரியா என்றே சந்தேகம் உண்டாகிறது. அப்படிப்பட்ட அபலைகளில் இரண்டு பேரின் கதையை இங்கே எழுத உத்தேசித்திருக்கிறேன். அவர்களில் ஒருத்தியின் பேர் லலிதாங்கி; மற்றொருத்தியின் பெயர் கோமளாங்கி. இவ்விரு பெண் கொடிகளும்…