இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 6 – அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
இந்திய மாநிலங்களுக்கு இணையான அதிகாரம் 16-ந் திகதி டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட அகில உலக பத்திரிகையாளர்களை கொண்ட ஒரு மகாநாடு கூட்டப் பட்டது. பல மணித்தியாலங்கள் அவர்கள் கேள்விகளுக்கெல்லாம் விடையளித்து எமது பிரச்சனையையும், அதற்கான பரிகாரத்தையும் பாரறியச் செய்ய ஒரு வாய்ப்பை இந்திய அரசே ஏற்படுத்தி கொடுத்தத. அப்பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு டாக்டர். நீலன் திருச்செல்வம் தலைமை தாங்கினார். அதே தினம் ராஜ்யசபையில் திருமதி இந்திரா காந்தி பேசும்போது இலங்கையில் இனக்கொலை (Genocide) நடப்பதாகக் கூறி உலகின் முன்…