அரியவகை ஏழைகள் – Fazil Freeman Ali
ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிறது. ஆம், உயர்சாதியிலுள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். வர்க்கம்-சாதி பற்றிய விவாதம் இந்தியாவிற்கு மட்டுமே உரித்தான ஒன்று. காரணம் Class என்ற வர்க்க பாகுபாடு உலகம் முழுக்க உள்ள ஒன்று என்றாலும் அது ஒருபோதும் பிறப்போடு நிரந்தரமாக முடிச்சிடப்படுவதில்லை. அரசியலில் எதிரெதிர் துருவங்களில் நிற்கும் அமெரிக்காவிலும் முன்னாள் சோவியத் யூனியனிலும் ஒரு செருப்பு தைப்பவரின் மகன் கல்வியிலும்…