Browsing: அருள்ராஜ்

ஹிஜாப் தடையும் முஸ்லிம் பெண்களின் எதிர்காலமும்! – அருள்ராஜ்

இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்ததால் மட்டுமே இஸ்லாமியராகிப்போனவர்களே இந்தியாவில் அதிகம். இஸ்லாமியக் கொள்கைக்கு எதிராக ஊர்தோறும் தர்ஹாக்கள் நிறைந்திருப்பதே இதற்குச் சாட்சி. இந்த லட்சணத்தில் இந்திய அரசியல்வாதிகளுக்கும், இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம்கொண்ட மேல்தட்டு வர்க்க நீதிபதிகளுக்கும் இஸ்லாத்தைப்பற்றி என்னவிதமான புரிதல் இருந்துவிடப் போகிறது? ஹிஜாப்பை பற்றிய அடிப்படைப் புரிதலே நம் நாட்டில் இல்லை. இயற்கையின் படைப்பில் ஆணும் பெண்ணும் எதிர்பாலின ஈர்ப்புடனேயே படைக்கப் பட்டுள்ளனர். எவ்வளவு பெரிய அப்பா டக்கர் மனிதனாக இருந்தாலும் அரைகுறையான ஆடையுடன் இருக்கும் பெண்ணின்…

இஸ்லாமியர்களுக்கே இஸ்லாம் மதத்தை புரியவில்லையா?

கோவை குண்டு வெடிப்பு கலவரத்தில் கைதான இஸ்லாமியர்களில் சிலரை நன்நடத்தையின் அடிப்படையில் 2009ம் ஆண்டு அண்ணா பிறந்த நாள் அன்று திமுக அரசு விடுதலை செய்தது. அதற்கு துக்ளக் சோ ராமசாமி கடுமையான எதிர்ப்பு காட்டினார். 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களின் விடுதலை என்பதை யாருமே நினைக்கவில்லை. தற்போது அவர்களின் விடுதலைக்காக திமுக அரசு சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் ஆர்எஸ்எஸ்-சங்பரிவார அமைப்புகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய சிறைக் கைதிகளின் விடுதலையைச் சிக்கலாக்க…