Browsing: அறிஞர் அண்ணா

1967 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்க அண்ணா மேற்கொண்ட முயற்சிகள்!

தம்பி! நாடெங்கும், வீடெல்லாம் தேர்தல் பற்றிய பேச்சொமேலோங்கி இருந்திட காண்கின்றாய். “சூடும் சுவையும் நிறைந்த பேச்சு’. காரணம் கணக்கு இணைந்த பேச்சு! முன்னாள் இந்நாள் நிலைமை விளக்கம் காட்டும் பேச்சு! அங்கு முன்போல் இல்லை! இங்கு முன்பு இருந்ததைவிட ஆர்வம் அதிகம் என்பனபோன்ற பேச்சுக்கள் எங்கும் ஒலித்துக்கொண்டுள்ளன. உமது கருத்து என்ன? எனக்கு நிலைமை நன்கு புரிந்ததால்தான் இவ்விதம் கூறுகிறேன். எவரெவரிடம் பேசவேண்டுமோ அவர்களிட மெல்லாம் பேசிப் பார்த்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். இன்னின்னார் நம்…

பிரிவினை தடைச்சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் அண்ணாவின் முழக்கம் – 1

(1962 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து 32 லட்சம் வாக்குகளையும், 50 சட்டமன்ற உறுப்பினர்களையும், 7 மக்களவை உறுப்பினர்களையும் திமுக பெற்றது. இது மத்திய அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. சீனாவுடன் யுத்தத்தை காரணம் காட்டி பிரிவினைத் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா மீது, 25-1-63இல் இராச்சிய சபையில் விவாதம் நடைபெற்றபோது, அதன் அவசியமற்ற தன்மையை விளக்கி அண்ணா ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இங்குத் தரப்படுகிறது. தமிழாக்கம் அண்ணா என்பது குறிப்பிடத்…

தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகளின் தேசிய இனம் எது? – C.N.Annadurai

எவனோ மொழி விஷயமாக நாலு புத்தகம் படித்தவனை, எல்லா விஷயங்களையும்பற்றி எல்லா ஏடுகளையும் படித்தறிந்து அவைகளை உலகுக்குக் கூறியாகவேண்டுமே என்று துடியாய்த் துடித்துக்கிடக்கும் நான், எப்படி என்னைவிட மேலானவன் என்று ஏற்றுக்கொள்ளமுடியும் என்று கூறுவரேல், அவர்கட்குக் கூறுவேன், தம்பி! ஆறடி உயரமுள்ள நோயாளியானாலும் மருத்துவனை நாடும்போது, குறைந்தது ஆறேகால் அடி உயரமாவது இருக்கவேண்டும் என்று தேடமாட்டான் – நாலரை அடி உயரமாக மருத்துவர் இருப்பினும் கவலைப்படமாட்டான். அதுபோலாகிலும் மொழிப்புலமை பெற்றோரின் முடிவுகளை ஏற்கட்டுமே; சின்ன மனிதர்கள் சொல்லும்…

சொல்லாதது – அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள்-2

அவளுக்கு, சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கணப் பண்டிதரும் சொல்லவில்லை, சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக் கொண்டு ஆஹா! என்ன மணம், எவ்வளவு இன்பம் என்று சொல்லாமலே, எவ்வளவு பேர், முகந்து ரசிக்கவில்லையா? சுந்தரியின் சிறு பிராயமுதலே அவளுடைய அழகைக் கண்டவர் களித்தனர். கடைவீதி போய்விட்டு திரும்புவதற்குள், கன்னத்திலே எத்தனையோ முத்தம், கையிலே பலவகைப் பண்டம் அப்பெண்ணுக்கு. பள்ளியில் பல நாள் ஆசிரியருக்குக் கோபம், பாடத்திலே அந்தப் பாவை நினைவைச் செலுத்தாததால்,…

இரும்பு முள்வேலி – அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் – 1

தமக்கு உரிய இடத்தில் பிறர் நுழையாது தடுத்திட முள்வேலி போடுகிறார்கள். இடத்துக்குப் போடப்பட்ட முள்வேலியைப் பற்றிய கதை அல்ல இது; இதயத்துக்குப் போடப்பட்டுவிடும் முள்வேலி பற்றியது. கருத்துக்களின் தோற்றம், மாற்றம், வகை, வடிவம், விளைவு, அவை ஏற்படுவதற்கான சூழ்நிலை ஆகியவை பற்றிய விளக்கமளிக்கும் இலக்கியம். ‘மனிதத் தன்மை’யின் புனிதத்தை விளக்கிடும் தூய்மை மிக்க கருத்தோவியம். கருமேகங்கள் திரண்டுள்ள காட்சியைத் தீட்டிட திறமை மிக்க எந்த ஓவியனாலும் முடியும். பால் நிலவு அழகொளி தந்திடும் காட்சியினைத் தீட்டிடவும், கைத்திறன்…

ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் – TAMIL LEADERS – 3

ராமசாமி நாயக்கரா – அப்பா இம்மாதிரி சொல்லிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு வருகிறார்கள் தமிழர்கள். இந்த ‘‘மூச்சுப் பயிற்சி’’ சென்ற பல வருஷ காலமாக, விடாமல், தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, இந்தப் பெருமூச்சிலே ஆனந்தமும் ஆத்திரமும் கலந்து களிக்கின்றன. இத்தகைய முரண்கொண்ட உணர்ச்சி களைத் தமிழர்களின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் ராமசாமி நாயக்கர் ஓர் அபூர்வமான பிறவியாகும். பிற்போக்காளர்கள் சபிக்கவும். தாராள நோக்குள்ளவர்கள் வாழ்த்தவும், ஆங்கில தேசத்தில் வாழ்ந்தும் வளர்ந்தும் வீழ்ந்தும், விடாமல் முண்டிக் கொண்டிருக்கிற மாஜி முதல்…

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் – Tamil leaders – 2

1916-ஆம் வருஷம் ஐரோப்பாவின் போர்க் களங்களிலே, மண்டைகள் அற்ற முண்டங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஜெர்மன் ‘‘ஹாவிட்ஸர்’’ பீரங்கிகள், பிரஞ்சு அரண்களைப் பொடியாக்கிக் கொண்டிருக்கின்றன. நேசக் கட்சியார் (பெல்ஜிய, பிரஞ்சு, ஆங்கிலேயர்கள்) மனமொடிந்து நிற்கிற சமயம். ‘‘ஒரு குதிரை, ஒரு குதிரைக்காக ராஜ்யம் (கொடுப்பேன்)’’ என்று மூன்றாவது ரிச்சர்டு அரசன் பரதபித்தது போல, ஒரு ஆள், சேனைக்கு ஒரு ஆள் என்று நேசக்கட்சியார் தவித்துக் கொண்டிருக்கிற ஆண்டு. காஞ்சிபுரத்திலே, தமிழ் மாகாண மகாநாடு கூடிற்று.மகாநாட்டுக்குத் தலைவி, கவியரசி ஸ்ரீமதி…