Browsing: அறிவழகன் கைவல்யம்

உலகின் செல்வாக்கான கரன்சி – கை.அறிவழகன்

சிலிர்க்க வைக்கிற குளிரும், அடர்ந்த மரக்கிளைகளில் இருந்து பெருகி வரும் காற்றுமாக இருந்த அந்த இரவை நான் நினைவு வைத்திருக்கிறேன். அந்த இரவு எல்லா இரவுகளையும் போலக் கடந்து போய் விடவில்லை. அந்த இரவின் மிக மென்மையான அடையாளங்களை என்னால் இப்போதும் உங்களுக்கு சொல்லிவிட முடியும். அந்த இரவில் நாங்கள் நடக்கையில் தெருவிளக்குகளின் பின்புறத்தில் மெல்லப் படிந்து கொண்டிருந்த இருள் பிச்சைக்காரர்களின் ரகசியமான அழுக்கு மூட்டைகளைப் போலக் குவியலாகக் கிடந்ததைப் பார்த்தேன். ஒரு கோவில் கோபுரத்தின்…

சிகரெட் புகைக்கும் பெண்ணுக்கொரு தோரணை உண்டு – அறிவழகன் கைவல்யம்

“ஈடன் கார்டன்” புறநகர் ரயில் நிலையம் மிக அழகானது, பிரிட்டிஷ் நினைவுகளை ஏந்தியபடி ஹூக்ளி நதிக்கரையில் பசுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறது. இணையாகப் பயணிக்கும் படகுகள், தொலைவில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற ஹௌராவின் இரும்புப் பாலம் என்று எல்லாவற்றையும் பார்த்தபடி இருக்கிறது. ஹௌரா ரயில் நிலையத்தின் அருகிலிருக்கும் அரசு நடத்தும் படகுப் போக்குவரத்துக் கழக நிலையத்தில் இருந்து கொல்கத்தா மற்றும் பல ஊர்களுக்குப் படகில் பயணிக்கலாம், கட்டணம் மிகக் குறைவு, ஹௌராவில் இருந்து ஈடன் கார்டன் வந்து சேர…