அறிவெனும் ஆயுதம் – Fazil Freeman Ali
இன்டெலிஜென்ஸ் (Intelligence) என்ற ஆங்கில வார்த்தைக்கு நாம் பொதுவாக அறிவு அல்லது புத்திசாலித்தனம் என்றுதான் பொருள் கொள்கிறோம், இல்லையா..? ஆனால் உளவியலாளர்களோ நாலெட்ஜ் (Knowledge) என்ற வார்த்தைக்குத்தான் அறிவு என்று பொருள் கொள்கின்றனர். இன்டெலிஜென்ஸ் (Intelligence) என்றால் நுண்ணறிவு என்று வகைப்படுத்துகின்றனர். அது என்ன அறிவும் நுண்ணறிவும்..? அறிவு என்பது தகவல்களின் சேகரிப்பு மட்டுமே. அந்த தகவல்களை பகுப்பாய்வு செய்து புதிய முடிவுகளையும் அனுமானங்களையும் எடுப்பதையே நுண்ணறிவு என்கின்றனர். நான் முனைவர் பட்டம் பெற்றது பொருளாதாரத்தில் என்றாலும்…