ஆச்சாரியா வினோபா பாவே (செப்டம்பர் 17, 1895-நவம்பர் 17, 1982) freedom fighters
இந்தியாவின் மகத்தான புதல்வர்களில் ஒருவரான வினோபா பாவே 1895ல் மஹாராஷ்டிராவில் உள்ள கோலாபா என்னுமிடத்தில் ஒரு சித்பவன பிராமண குடும்பத்தில் பிறந்தார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் விடுதலை தாகம் கொண்டவராக வளர்ந்தார். படிப்பில் சிறந்தவரான அவர் கணிதப்பாடத்தில் முதல் மாணவராக விளங்கினார். ஆனால் நாட்டிற்கு சேவைசெய்வதிலேயே அவரது நாட்டம் இருந்தது. அந்த எண்ணத்தில் உறுதியாக இருந்த அவர், தனது அனைத்து சான்றிதழ்களையும் தீயிட்டு கொழுத்திவிட்டு காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் மிகத்தீவிரமாக பங்கேற்றார்.…