Browsing: ஆதனூர் ஊராட்சி

முயல்கறி அனுபவம் – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

ஊர்ச்சாமி கும்புடுறதுனு முடிவெடுத்திட்டா, ஊரே குதூகலம் ஆகிரும். அதிலும் மழை தண்ணி செழிப்பா இருந்து, விளைச்சலும் நல்லா இருந்திட்டா சந்தோஷத்துக்கு அளவே இருக்காது. எதுக்குச் சொல்றேன்னா, விளைச்சல் நல்லா இருந்தாக் கூட, திருவிழாவுக்கு தலக்கட்டு வரியை கொடுக்க முடியாத குடும்பங்களும் இருக்கும். அந்த மாதிரி குடும்பங்கள் கூலி வேலை செய்து சேர்த்து வச்ச தானியத்தை விற்றுத்தான் தலக்கட்டு வரியை கொடுக்க வேண்டியிருக்கும். தமிழர்களின் பொருளாதார சீரழிவுக்கு இத்தகைய வீண் செலவுகள்தான் காரணம் என்று தந்தை பெரியார் அந்தக்…

சாமி இல்லாட்டி போகுது… தலக்கட்டு வரியக் குடு! – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

ஊர்ச்சாமி கும்பிட்டு 15 வருஷம் ஆச்சு. கடைசியா 2007ஆம் ஆண்டு முத்தாளம்மன் கோவில், அய்யனார் கோவில் எல்லாத்தையும் புதுப்பித்து, பெயிண்ட் அடிச்சு கும்பாபிசேகம் செய்து சாமி கும்பிட்டாங்க. ஊர்ச்சாமியை வருஷா வருஷம் கும்பிடுவாங்க. அதெல்லாம் இல்லாமப் போச்சு. அதுக்குக் காரணம் என்னன்னா மொதல்ல ஒரு வருஷம் மழை பெய்யலைனா சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. மழை பெஞ்சு நல்லா வெளைஞ்சாலும் சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. அப்போவெல்லாம் நிலத்தடி கிணத்து நீரையும், ஏரி குளங்களில் தேங்கும் நீரையும் மட்டுமே நம்பியிருந்த…

காலந்தோறும் நடிகர்களும் ரசிகர்களும்! – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

ரஜினி, கமல், அஜித், விஜய் நடித்த படம் வரும்போது முதல் காட்சி விசித்திரமா இருக்கும். அவருடைய ரசிகர்கள் அந்தந்த படங்களில் நடிகர்கள் என்ன கெட்டப்பில் வருகிறார்களோ, அதேபோல தங்களையும் மாற்றிக்கொண்டு வருவார்கள். ஒரு திரைப்படம் வந்தால், அந்த படத்தின் நாயகனாகவே மாறிவிடுவது சிறுவர்களின் மனநிலை என்பார்கள். ஆனால், இளைஞர்களிடமும் அந்த மனநிலை இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும். சினிமாவைப் பொருத்தமட்டில் நான் எப்படி இருந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். நான் எந்த ஒரு நடிகருக்கும் வெறித்தனமான அல்லது…

கூட்டு வண்டியில் போய் மதுரையில் பார்த்த சினிமா! – ஆதனூர் சோழன் நினைவுக் குறிப்புகள் 3

சின்ன வயசுல நான் முதன்முதலில் பார்த்த சினிமா இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது. மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தோம். அப்போ எனக்கு அஞ்சு வயசு. மதுரையில் ஆரப்பாளையம் கரிமேடு பகுதி யில் இருக்கிற மோதிலால் தெருவில் அத்தை குடியிருந்தாங்க. மாமா எல்ஐசியில் வேலை செய்தார். அப்போ எல்ஐசி ஆபீஸ் குட்செட் தெருவில் இருந்தது. அன்றைய மதுரை இப்போது மாதிரி இல்லை. வைகை ஆற்றை கடக்க வேண்டும் என்றால் கோரிப்பாளையம் மேம்பாலம் மட்டும்தான் வழி. அத்தை வீட்டுக்கு போகனும்னா கோரிப்…

கற்பனையை விரித்த கலையரங்கம்! – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள் 2

அலங்காநல்லூர் வாழ்க்கையை நினைத்தால் ரொம்ப ஜாலியாக இருக்கும். தாத்தா தொடங்கிய மரக்கடையோடு, விறகுக்கடையும் சேர்த்து வைத்தார் அப்பா. அலங்காநல்லூரிலேயே எங்கள் விறகுக்கடை மட்டும்தான் இருந்தது. பிறகு வேறு சிலர் சின்னதாய் தொடங்கினார்கள். மரம் வெட்டும்போது, சின்னக் கிளைகள் விறகுக்கு நறுக்கப்படும். மா, வேம்பு, கருவேல், சீமைக்கருவேல் விறகுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கும். ஒரு பக்கம் மரத்தை அறுப்பார்கள். மரச்சாமான்களை செய்வார்கள். இன்னொரு பக்கம் விறகு உடைப்பார்கள். சுள்ளிகள் தனியாகவும், உடைத்த விறகு தனியாகவும் அடுக்கி வைத்திருப்போம்.…

தலித் வாக்காளர்களை குறைக்க எல்லையை விட்டுக்கொடுக்கும் ஆதனூர் ஊராட்சி!

பக்கத்து நாடுகளுடன் பிரச்சனையை சுமுகமா தீர்க்க மனசில்லாம எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு, ராணுவத்துக்கு செலவு செஞ்சுக்கிட்டு இருக்கு இந்தியா. பாகிஸ்தான்கிட்ட ஒரு மாதிரியும், சீனாகிட்ட ஒருமாதிரியும் இந்திய அரசு அணுகுது… அருணாச்சல பிரதேசத்திற்குள் சீனா ஆக்கிரமிப்பை கண்டுக்காம விடுது இந்திய அரசு… ஆனால், பாகிஸ்தான் கிட்ட வம்புச்சண்டை இழுக்குறதும், பாகிஸ்தானை காரணம் காட்டி ஜம்மு காஷ்மீரை கூறுபோடுறதுமா இந்திய அரசு ஏட்டிக்குப் போட்டியா நடந்துக்குது… நாடுகள் இடையே இப்படி என்றால் தேசபக்தி பொங்குது. ஆனால், நாட்டுக்குள்…