அலங்காநல்லூர் அன்றும் இன்றும் – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்
எங்கள் விறகுக் கடைதான் அலங்காநல்லூரில் முதல் விறகுக்கடை. தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டுவருவார். அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்பக் கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை கிடங்கிற்கு குறுக்காக தென்னை மரத்தின் மீது வைப்பார்கள். நூல் பிடித்து அளந்து நீளமான ரம்பத்தை…