கற்றுக்கொடுத்த கன்னித்தீவு – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்
அலங்காநல்லூர் பள்ளிக்கூடத்திற்கும் மற்ற கிராமத்து பள்ளிக்கூடங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மூன்றாம் வகுப்பிலேயே எழுத்துக்கூட்டி வாசிக்கவும், ஆங்கில எழுத்துகளை எழுதப் பழகவும் கற்றுக் கொடுத்துவிடுவார்கள். எங்கள் வீட்டில் தாத்தாவும் அப்பாவும் தினத்தந்தி படிப்பார்கள். எனது அம்மாவும் எழுத்துக்கூட்டி படிக்கும். நான் முதன்முதலில் எழுத்துக்கூட்டி வாசித்தது தினத்தந்தியில் வந்த கன்னித்தீவும், துப்பறியும் கதையும்தான். அதுபோக, ஆண்டிப்பண்டாரம் என்று ஒரு துணுக்கு இருக்கும். அதில் ஏதேனும் ஒரு பாடல் வரி இடம்பெறும். அன்றைக்கு நான் வாசித்த கதையை நண்பர்களுக்கு சொல்வேன்.…