Browsing: ஆதனூர் சோழன் கவிதைகள்

கேதார்நாத் பாண்டே முதல் ராகுல சாங்கிருத்தியாயன் வரை… – ஆதனூர் சோழன்

அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. கிழக்கு உத்தரப்பிரதேசம் அசம்கார் மாவட்டத்தில் உள்ள பண்டாஹா என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்தான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தான். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தான். ஆரம்பப்பள்ளி கல்வியை கற்றிருக்கிறான். என்ன காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினான் என்று தெரியவில்லை. மிகச் சிறிய வயதிலேயே வெளியேறிவிட்டான். வாரணாசிக்கு சென்று, அங்கு ஏழை மாணவர்களுக்கான ஆசிரமத்தில் தங்கி சமஸ்கிருதம் கற்றான். ஒரு சந்தர்ப்பத்தில் பீகார் மாநிலத்தில்…

ஆதீனங்களிடம் தோற்றாரா முதல்வர் ஸ்டாலின்? – ஆதனூர் சோழன்

ஆதீனங்களிடம் மண்டியிட்டது திமுக அரசு என்று குதூகலிக்கிறார்கள் சிலர். உண்மையில், ஆதீனங்களை அவர்கள் தங்கள் கைப்பாவைகளாக பயன்படுத்தும் முயற்சியை மழுங்கடித்திருக்கிறது திமுக அரசு என்கிறார்கள் திமுகவினர். இந்தக் குளறுபடிகளுக்கு என்ன காரணம்? அதிகாரிகளா? அரசியல்வாதிகளா? என்று ஆராய்ந்தால், அடிப்படைக் காரணம் அதிகாரிகள்தான். அவர்களை தூண்டியது திராவிடர் கழகம்தான். திராவிடர் கழகம் எப்போதுமே, திமுக ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் அதீதமாக உரிமை எடுத்துக்கொண்டு, தங்களுடைய ஆட்சியைப் போலவே செயல்படத் தொடங்கிவிடும். சாதாரணமாக கடந்து போயிருக்க வேண்டிய ஒரு நிகழ்வை,…

கற்றுக்கொடுத்த கன்னித்தீவு – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

அலங்காநல்லூர் பள்ளிக்கூடத்திற்கும் மற்ற கிராமத்து பள்ளிக்கூடங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மூன்றாம் வகுப்பிலேயே எழுத்துக்கூட்டி வாசிக்கவும், ஆங்கில எழுத்துகளை எழுதப் பழகவும் கற்றுக் கொடுத்துவிடுவார்கள். எங்கள் வீட்டில் தாத்தாவும் அப்பாவும் தினத்தந்தி படிப்பார்கள். எனது அம்மாவும் எழுத்துக்கூட்டி படிக்கும். நான் முதன்முதலில் எழுத்துக்கூட்டி வாசித்தது தினத்தந்தியில் வந்த கன்னித்தீவும், துப்பறியும் கதையும்தான். அதுபோக, ஆண்டிப்பண்டாரம் என்று ஒரு துணுக்கு இருக்கும். அதில் ஏதேனும் ஒரு பாடல் வரி இடம்பெறும். அன்றைக்கு நான் வாசித்த கதையை நண்பர்களுக்கு சொல்வேன்.…

1967 தேர்தலில் கொடிபிடித்து கோஷம் போட்ட அனுபவம் – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

1966ல் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடியது. 5 படி அரிசிக்கு மேல் பஸ்சில் கொண்டுபோக முடியாது. அந்த அளவுக்கு அரிசிக் கடத்தலை கடுமையாக தடுத்தது காங்கிரஸ் அரசு. ஆனால், வியாபாரிகள் அரிசியையும் அத்தி யாவசிய பொருட்களையும் பதுக்கி வைத்து செயற்கையாக உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத் திநார்கள். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. ஆனால், பஸ்சில், சைக்கிளில் அரிசி கொண்டுபோகும் சாமானியர்களை வாட்டிப் பிழிந்தது. அப்போதெல்லாம் ரேஷன் கடையே கிடையாது. அரிசிச் சோறு எல்லா வீடுகளிலும் கிடைக்காது. மூன்று…

அலங்காநல்லூர் அன்றும் இன்றும் – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

எங்கள் விறகுக் கடைதான் அலங்காநல்லூரில் முதல் விறகுக்கடை. தனியாருக்கு சொந்தமான மரங்களை வாங்கி வெட்டி அடிமரம், கிளைகள், சுள்ளிகள் என்று பிரித்து கட்டை வண்டிகளில் ஏற்றி அப்பா கொண்டுவருவார். அடிமரத்தை பலகைகளாகவும், கிளைகளை நிலை, ஜன்னல் கட்டைகளாகவும் அறுப்பார்கள். மரம் அறுக்க ஒரு ரம்பக் கிடங்கு இருக்கும். கிடங்கிற்கு குறுக்கே ஒரு தென்னை மரத்தை போட்டிருப்பார்கள். பலகை அறுக்க வேண்டிய மரத்தை கிடங்கிற்கு குறுக்காக தென்னை மரத்தின் மீது வைப்பார்கள். நூல் பிடித்து அளந்து நீளமான ரம்பத்தை…

ஒரு ஊருக்கு மூன்று பாதைகள்! – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

அப்பா பேரு அலங்காரம். அதோடு சாதிப் பேரும் சேத்து வரும். பள்ளிக்கூடத்திலேயே அப்படித்தான் பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஏன்னா, அப்பாவோட தாத்தா பேரு அதுதானாம். அந்தத் தாத்தாவோட அப்பா பேரு பெருமாள். அதை எனது அப்பாவின் தம்பிக்கு வைத்திருக்கிறார்கள். அதுகிடக்கட்டும். அப்பாவோட பேரைச் சொல்லி அப்பத்தா உட்பட யாரும் கூப்பிட்டதில்லை. மாமனாரு பேரை சொல்லக் கூடாதில்லையா? அதுகூட பரவாயில்லங்க. அலங்காநல்லூர் என்ற பேரைக்கூட சொல்லமாட்டாங்க. அதை எப்படி கூப்புடுவாங்கனு சொல்றீங்களா? ஸ்டேஷனூரு என்றுதான் அலங்காநல்லூரை சொல்லுவார்கள். எங்கள் பகுதிக்கு…

எனது நினைவுகளில் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் – ஆதனூர் சோழனின் நினைவுக்குறிப்புகள்

1965ல் நான் முதல் வகுப்பு படிக்கிறேன். அலங்காநல்லூர் நடுத்தெருவின் கடைசியில் இருந்தது கூரைப்பள்ளி கூடம். பள்ளிக்கூடத்தை ஒட்டி புளியந்தோப்பு இருந்தது. வகுப்புகளுக்கு இடையே காட்போர்டு தட்டி மட்டுமே சுவராக இருக்கும். அலங்காநல்லூர் வெள்ளிமலைக் குன்றின் தொடக்கத்தில், ஊர் கடைசியில் எங்கள் பள்ளி இருந்தது. அதைத் தாண்டி, ஆண்கள் அரசு உயர் நிலைப் பள்ளி இருக்கிறது. அன்றைக்கு எங்கள் ஊரிலிருந்து ஒற்றையடி பாதையில் வரும்போதே அந்தப் பள்ளிக்கூடம் தெரியும். “அஞ்சாப்பு முடிச்சிட்டுத்தான் அந்தப் பள்ளிக் கூடத்துக்கு போகனும்” என்று…

சாமி இல்லாட்டி போகுது… தலக்கட்டு வரியக் குடு! – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

ஊர்ச்சாமி கும்பிட்டு 15 வருஷம் ஆச்சு. கடைசியா 2007ஆம் ஆண்டு முத்தாளம்மன் கோவில், அய்யனார் கோவில் எல்லாத்தையும் புதுப்பித்து, பெயிண்ட் அடிச்சு கும்பாபிசேகம் செய்து சாமி கும்பிட்டாங்க. ஊர்ச்சாமியை வருஷா வருஷம் கும்பிடுவாங்க. அதெல்லாம் இல்லாமப் போச்சு. அதுக்குக் காரணம் என்னன்னா மொதல்ல ஒரு வருஷம் மழை பெய்யலைனா சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. மழை பெஞ்சு நல்லா வெளைஞ்சாலும் சாமி கும்புடனும்னு சொல்லுவாங்க. அப்போவெல்லாம் நிலத்தடி கிணத்து நீரையும், ஏரி குளங்களில் தேங்கும் நீரையும் மட்டுமே நம்பியிருந்த…

காலந்தோறும் நடிகர்களும் ரசிகர்களும்! – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

ரஜினி, கமல், அஜித், விஜய் நடித்த படம் வரும்போது முதல் காட்சி விசித்திரமா இருக்கும். அவருடைய ரசிகர்கள் அந்தந்த படங்களில் நடிகர்கள் என்ன கெட்டப்பில் வருகிறார்களோ, அதேபோல தங்களையும் மாற்றிக்கொண்டு வருவார்கள். ஒரு திரைப்படம் வந்தால், அந்த படத்தின் நாயகனாகவே மாறிவிடுவது சிறுவர்களின் மனநிலை என்பார்கள். ஆனால், இளைஞர்களிடமும் அந்த மனநிலை இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கும். சினிமாவைப் பொருத்தமட்டில் நான் எப்படி இருந்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். நான் எந்த ஒரு நடிகருக்கும் வெறித்தனமான அல்லது…

கூட்டு வண்டியில் போய் மதுரையில் பார்த்த சினிமா! – ஆதனூர் சோழன் நினைவுக் குறிப்புகள் 3

சின்ன வயசுல நான் முதன்முதலில் பார்த்த சினிமா இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது. மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தோம். அப்போ எனக்கு அஞ்சு வயசு. மதுரையில் ஆரப்பாளையம் கரிமேடு பகுதி யில் இருக்கிற மோதிலால் தெருவில் அத்தை குடியிருந்தாங்க. மாமா எல்ஐசியில் வேலை செய்தார். அப்போ எல்ஐசி ஆபீஸ் குட்செட் தெருவில் இருந்தது. அன்றைய மதுரை இப்போது மாதிரி இல்லை. வைகை ஆற்றை கடக்க வேண்டும் என்றால் கோரிப்பாளையம் மேம்பாலம் மட்டும்தான் வழி. அத்தை வீட்டுக்கு போகனும்னா கோரிப்…

கற்பனையை விரித்த கலையரங்கம்! – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள் 2

அலங்காநல்லூர் வாழ்க்கையை நினைத்தால் ரொம்ப ஜாலியாக இருக்கும். தாத்தா தொடங்கிய மரக்கடையோடு, விறகுக்கடையும் சேர்த்து வைத்தார் அப்பா. அலங்காநல்லூரிலேயே எங்கள் விறகுக்கடை மட்டும்தான் இருந்தது. பிறகு வேறு சிலர் சின்னதாய் தொடங்கினார்கள். மரம் வெட்டும்போது, சின்னக் கிளைகள் விறகுக்கு நறுக்கப்படும். மா, வேம்பு, கருவேல், சீமைக்கருவேல் விறகுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கும். ஒரு பக்கம் மரத்தை அறுப்பார்கள். மரச்சாமான்களை செய்வார்கள். இன்னொரு பக்கம் விறகு உடைப்பார்கள். சுள்ளிகள் தனியாகவும், உடைத்த விறகு தனியாகவும் அடுக்கி வைத்திருப்போம்.…

பாடாய் படுத்திய மீனும் நாட்டுக்கோழியும்! – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள் 1

மீனையோ, கறியையோ குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். அல்லது வறுத்து சாப்பிடு வார்கள். இதுதான் எனது சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். இப்போ என்னடானா எது மீன், எது கோழி, எது ஆட்டுக்கறினு கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விதவிதமா சமைச்சு தர்றாங்க. அந்த வெரைட்டியைப் பத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி, என்னோட அசைவ உணவு அனுபவம் குறித்து கொஞ்சம் சொல்றேன். என் வீட்டில் அப்பாவுக்கு ஆட்டுக்கறி மட்டும்தான் பிடிக்கும். அதில் அவர் ரொம்ப கண்டிப்பா இருப்பார். வெளியில் சாப்பிடனும்னா சைவ ஓட்டலுக்குத்தான்…

1 2 3