Browsing: ஆதனூர் சோழன் நினைவுக் குறிப்புகள்

சோவியத்தை சிதைக்கலாம்… புரட்சி வரலாற்றை சிதைக்க முடியாது! – ஆதனூர் சோழன்

முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த சமயம். ஜார் மன்னரின் தலைமையிலான ரஷ்ய பேரரசு நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உள்நாட்டில் மாமேதை லெனின் தலைமையிலான புரட்சி ஆயத்தங்களுக்கு இடையே உலகப்போரில் ரஷ்யாவை பாதுகாக்கும் வேலையில் ராணுவத்துடன் மக்களும் எதிரிகளை எதிர்த்து போரிட்டார்கள். போர் முடிந்தது. மக்கள் உணவுக்காக அலைமோதும் பரிதாப நிலை தொடங்கியது. பரந்து விரிந்த ரஷ்ய பேரரசில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. பேரரசர் ஜாருக்கு எதிராக போராட்டங்களும் கலகங்களும் அதிகரித்தன. போராட்டங்களை ஒடுக்க வேண்டிய ராணுவம் மக்களோடும்,…

ஆட்டுக்குத் தாடியும் ஆளுநர் பதவியும்! – ஆதனூர் சோழன்

பிரிட்டனில் ராணிக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அந்த அளவுக்குத்தான் இந்தியாவில் ஜனாதிபதிக்கு அதிகாரம். ஆனால், பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி இருக்கும் வரை நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பிரிட்டன் மக்கள் நம்பிகையோடு சொல்வார்கள் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் ஜனாதிபதி பதவியும் அப்படித்தான். ஆனால், பெரும்பாலான ஜனாதிபதிகள் மத்திய அரசு காட்டுகிற பேப்பரில் கையெழுத்துப் போடுகிறவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பது கண்கூடான உண்மை. இப்படி இருக்கும்போது, அவரால் நியமிக்கப்படுகிற ஆளுநர்களுக்கு என்ன பொறுப்பு இருந்துவிடப் போகிறது? அதனால்தான், ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு…

கேதார்நாத் பாண்டே முதல் ராகுல சாங்கிருத்தியாயன் வரை… – ஆதனூர் சோழன்

அவனுக்கு பெற்றோர் இட்ட பெயர் கேதார்நாத் பாண்டே. கிழக்கு உத்தரப்பிரதேசம் அசம்கார் மாவட்டத்தில் உள்ள பண்டாஹா என்ற கிராமத்தில் 1893 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்தான். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தான். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தான். ஆரம்பப்பள்ளி கல்வியை கற்றிருக்கிறான். என்ன காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறினான் என்று தெரியவில்லை. மிகச் சிறிய வயதிலேயே வெளியேறிவிட்டான். வாரணாசிக்கு சென்று, அங்கு ஏழை மாணவர்களுக்கான ஆசிரமத்தில் தங்கி சமஸ்கிருதம் கற்றான். ஒரு சந்தர்ப்பத்தில் பீகார் மாநிலத்தில்…

ஆதீனங்களிடம் தோற்றாரா முதல்வர் ஸ்டாலின்? – ஆதனூர் சோழன்

ஆதீனங்களிடம் மண்டியிட்டது திமுக அரசு என்று குதூகலிக்கிறார்கள் சிலர். உண்மையில், ஆதீனங்களை அவர்கள் தங்கள் கைப்பாவைகளாக பயன்படுத்தும் முயற்சியை மழுங்கடித்திருக்கிறது திமுக அரசு என்கிறார்கள் திமுகவினர். இந்தக் குளறுபடிகளுக்கு என்ன காரணம்? அதிகாரிகளா? அரசியல்வாதிகளா? என்று ஆராய்ந்தால், அடிப்படைக் காரணம் அதிகாரிகள்தான். அவர்களை தூண்டியது திராவிடர் கழகம்தான். திராவிடர் கழகம் எப்போதுமே, திமுக ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் அதீதமாக உரிமை எடுத்துக்கொண்டு, தங்களுடைய ஆட்சியைப் போலவே செயல்படத் தொடங்கிவிடும். சாதாரணமாக கடந்து போயிருக்க வேண்டிய ஒரு நிகழ்வை,…

எனது நினைவுகளில் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் – ஆதனூர் சோழனின் நினைவுக்குறிப்புகள்

1965ல் நான் முதல் வகுப்பு படிக்கிறேன். அலங்காநல்லூர் நடுத்தெருவின் கடைசியில் இருந்தது கூரைப்பள்ளி கூடம். பள்ளிக்கூடத்தை ஒட்டி புளியந்தோப்பு இருந்தது. வகுப்புகளுக்கு இடையே காட்போர்டு தட்டி மட்டுமே சுவராக இருக்கும். அலங்காநல்லூர் வெள்ளிமலைக் குன்றின் தொடக்கத்தில், ஊர் கடைசியில் எங்கள் பள்ளி இருந்தது. அதைத் தாண்டி, ஆண்கள் அரசு உயர் நிலைப் பள்ளி இருக்கிறது. அன்றைக்கு எங்கள் ஊரிலிருந்து ஒற்றையடி பாதையில் வரும்போதே அந்தப் பள்ளிக்கூடம் தெரியும். “அஞ்சாப்பு முடிச்சிட்டுத்தான் அந்தப் பள்ளிக் கூடத்துக்கு போகனும்” என்று…

கூட்டு வண்டியில் போய் மதுரையில் பார்த்த சினிமா! – ஆதனூர் சோழன் நினைவுக் குறிப்புகள் 3

சின்ன வயசுல நான் முதன்முதலில் பார்த்த சினிமா இன்னும் பிரமாண்டமாக இருக்கிறது. மதுரை தங்கம் தியேட்டரில் பார்த்தோம். அப்போ எனக்கு அஞ்சு வயசு. மதுரையில் ஆரப்பாளையம் கரிமேடு பகுதி யில் இருக்கிற மோதிலால் தெருவில் அத்தை குடியிருந்தாங்க. மாமா எல்ஐசியில் வேலை செய்தார். அப்போ எல்ஐசி ஆபீஸ் குட்செட் தெருவில் இருந்தது. அன்றைய மதுரை இப்போது மாதிரி இல்லை. வைகை ஆற்றை கடக்க வேண்டும் என்றால் கோரிப்பாளையம் மேம்பாலம் மட்டும்தான் வழி. அத்தை வீட்டுக்கு போகனும்னா கோரிப்…