Browsing: ஆதானூர் சோழன்

மனிதகுல வரலாறு – ரோம் அரசு தோற்றம்

ரோமபுரியின் குடியரசு பாட்ரிசியர்களால் கட்டுப்படுத் தப்பட்டது. இவர்கள்தான் செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த செனட் 300 உறுப்பினர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த செனட் சபைதான் சட்டங்களை இயற்றியது. போர் தொடுக்க வேண்டுமென்றால் இது தான் அனுமதி அளித்தது. கட்டிடங்கள் கட்டவும், வரிகள் விதிக்கவும், பொதுமக்களுக்கான இதர கொள்கைகளை முடிவு செய்யவும் இந்த செனட் சபைதான் அதிகாரம் மிக்க தாக இருந்தது. இந்த ‘செனட்’ சபை தவிர, ஒன்றியம், கவுன்சில் என்று அழைக்கப்பட்ட அலுவலகத்திற்கு 2 தலைவர்களையும் ரோமானியர்கள் நியமித்திருந்தனர்.…

மனிதகுல வரலாறு – ஆர்மேனியர்கள்

மத்திய கிழக்கு பகுதியில் தோன்றிய நாகரிகங்களுள் முக்கியமானது ஆர்மேனிய நாகரிகம். முரட்டுத்தனம், ராணுவ பலம் போன்றவற்றால் அறியப் பட்ட ஆர்மேனியர்கள் கி.மு.1200க்குள் எகிப்து மற்றும் மெசபடோமியா பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வந்தனர். எகிப்து மற்றும் மெசபடோமியா ஆகிய 2 தேசங்களின் வர்த்தக போக்குவரத்தை கட்டுப் பாட்டில் வைத்திருந்ததால் ஆர்மேனியர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது. பிற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் ஆர்மேனிய மொழியைக் கற்கத் தொடங்கினர். இந்த மொழி ஹீப்ரு, அரபி மொழிகளை ஒத்திருந்தது. பல நூறாண்டுகளாக…