Browsing: ஆரியப்பட்டா

எம்.கே.வைனு பாப்பு – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 20

1927ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி வைனு பாப்பு சென்னையில் பிறந்தார். அவரது தந்தை ஹைதராபாத்தில் உள்ள நிஸாமியா வானியல் ஆய்வுக் கூடத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். வைனு பாப்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பில் கெட்டிக்காரராகத் திகழ்ந்தார். விளையாட்டிலும் ஆர்வமிக்க வராக இருந்தார். கல்லூரி பத்திரிகைகளில் எழுதினார். ஹைதராபாத் வரும் முன்னணி விஞ்ஞானிகளை வைத்து கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தார். இலக்கியம், கலை, உருது கவிதைகளில் வைனு பாப்புவுக்கு ஈடுபாடு இருந்தது. வானியல் குறித்து ஆய்வு செய்ய வானியல்…

எம்.ஜி.கே.மேனன் – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள்– 19

மாம்பிலிகலத்தில் கோவிந்த குமார் மேனன் புகழ்பெற்ற இந்திய இயற்பியலாளர். சுருக்கமாக எம்.ஜி.கே.மேனன் என அழைக்கப்படுகிறார். 1928ம் ஆண்டு, ஆகஸ்ட் 28ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களுரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி. ஆரம்பக் கல்வியை உள்ளூரில் முடித்தார். மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். 1949ம் ஆண்டு லண்டனில் உள்ள பிரிஸ்ட்டால் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். இந்தியா திரும்பியதும் 1955ம் ஆண்டு, டாடா இன்ஸ்ட்டிட்யூட் பண்டமென்ட்டல் ரிசர்ச்-சில் சேர்ந்தார். புவிஈர்ப்பு விசைக்கு அருகில்…

ராஜா ராமண்ணா – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள்– 18

1974 மே 18ம் தேதி இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில் இந்தச் சோதனை நடந்தது. இந்தச் சோதனையின் வெற்றிக்குக் காரணம் பாபாவும் ராஜா ராமண்ணாவும் அவருடைய சகாக்களும்தான். அப்சரா, சிர்கஸ், புர்னிமா போன்ற நாட்டின் முதல் அணுஉலைகளை அமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் ராஜாராமண்ணா. ராமண்ணா 1925ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்தார். ஆரம்பக் கல்வியை பெங்களூரில் படித்தார். மேல்படிப்புக்கு லண்டன் சென்ற அவர் லண்டன்…

வி.ஏ.சாராபாய் – Indian Scientists Series – 16

1943ம் ஆண்டு விக்ரம் ஏ. சாராபாய் காஸ்மிக் கதிர்களைக் குறித்து ஆய்வு செய்ய, இமயமலைக்குச் சென்றார். அப்போது அவருக்கு வயது 23தான். சாராபாய் 1919ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பிறந்தார். பாபாவைப் போலவே இவரும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அவர் விரும்பியிருந்தால் ஒரு பெரிய தொழிலதிபர் ஆகியிருக்கலாம். ஆனால் அவரது ஆர்வம் இயற்பியலிலும் கணக்கிலும் இருந்தது. சாராபாய் உயர் படிப்புக்காக லண்டன் சென்றார். அங்கு பிஎச்டி முடித்துத் திரும்பியதும் அகமதாபாத்தில் ஒரு விஞ்ஞான பரிசோதனைக் கூடத்தை…

ஹெச்.ஜே.பாபா -புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 15

காஸ்மிக் கதிர்கள் மிக விரைவாகச் செல்லக் கூடியவை. பூமிக்கு மேல்பரப்பில் விண்வெளியில் இருந்து வரக்கூடிய மிக மிக நுண்ணிய துகள்கள் காஸ்மிக் கதிர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பூமியின் காற்று மண்டலத்திற்குள் வரும்போது அணுக்களோடு மோதி, எலக்ட்ரான் மழையை உருவாக்கும். 1937ம் ஆண்டு இந்திய இயற்பியல் விஞ்ஞானி ஹோமி ஜெஹாங்கிர் பாபாவும் ஜெர்மன் இயற்பியல் விஞ்ஞானி டபிள்யூ ஹெய்ட்லரும் காஸ்மிக் கதிர்களின் இந்த சூட்சுமத்தை விடுவித்தனர். அதன் மூலம் அவர்கள் உலகப் புகழ்பெற்றனர். பாபா அதையும் தாண்டிச்…

கே.எஸ்.கிருஷ்ணன் – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 15

1955 ஆம் ஆண்டு அமெரிக்க நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் ஆண்டுவிழா கொண்டாடியது. அந்த விழாவில் உரையாற்ற இந்திய விஞ்ஞானி கே.எஸ்.கிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார். கிருஷ்ணன் உரையாற்றும் போது, இந்தியாக் கலாச்சாரத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றத்தைக் கொண்டு வருவது குறித்துப் பேசினார். இந்தியப் பண்பாடு, மதம், தத்துவம், விஞ்ஞானக் கோட்பாடுகள் ஆகியவற்றில் அவருக்கு இருந்த தேர்ந்த அறிவை அவரது பேச்சு வெளிப்படுத்தியது. அமெரிக்க விஞ்ஞானிகள் அனைவரையும் கிருஷ்ணன் தனது பேச்சால் அசர வைத்து விட்டார். கிருஷ்ணனின்…

எஸ்.என்.போஸ் – புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள்– 14

அசுடோஸ் முகர்ஜி மிகப்பெரிய கல்வியாளர். அவர், கல்கத்தாவில் விஞ்ஞானப் பல்கலைக்கழகக் கல்லூரியை உருவாக்கினார். அந்தச் சமயத்தில் ஒரு ஒழுங்கான நூலகம் கூட அந்தக் கல்லூரியில் இல்லை. 1916ம் ஆண்டு இங்கு பேராசிரியர்களாகப் பணியாற்ற வந்த இருவர் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் இருவரும் நிறைய அறிவைத் தேட வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். ஒருவர் இயற்பியல் துறையிலும் மற்றொருவர் கணக்கிலும் ஆய்வு செய்து புதிதாக ஏதேனும் கண்டுபிடிக்க வேண்டும் என லட்சியம் கொண்டிருந்தனர். அந்தக் காலகட்டத்தில் இயற்பியல் துறையில்…

1 2 3