சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3
சுவாசக்கலை குறித்து இடைக்காடர் சித்தர் தொடர்ச்சி மனநிலை சூனியப்பட்ட நேரத்தில் யோகிகளும் சித்தர்களும் உடலையும் உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்த சிறுமூளையின் தொடர்பு கொண்ட செயலாற்றும்போது தாவரங்களின் மனதோடு தன் மனதைத் தொடர்புபடுத்தி பேசிக்கொண்டிருப்பார்கள். ஞானிகளும் யோகிகளும் பூமிக்கடியிலுள்ள அஷ்டமா உலோகங்களையும் நவரத்தினங்களையும் 32 பாஷாணங்களையும் 108 விதமான கற்களையும் பலவிதமான மண்களையும் மண்ணுக்கடியிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் இருந்த இடத்திலேயே இருந்து ஆராய்ந்து கண்டெடுக்க ‘ஞானதிருஷ்டி’ என்னும் ஈர்ப்புத்தன்மையைப் பயன்படுத்தினர். இதேபோல ஆகாயத்தில் உள்ள சூரியன் சந்திரன் கிரகங்கள்,…