Browsing: இடைக்காடர் சித்தர் – 4

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 4

யோக சமாதி சாதனைகள் தொடர்ச்சி கூர்மம் என்றபெயருடைய நாடியில் ஸம்யமம் செய்யும்போது மனதை நடுங்காது நிலைத்து நிற்கச் செய்யமுடியும். கூர்மநாடியானது ஆமை வடிவில் இருக்கும் நாடியானதால் இப்பெயர்பெற்றது. இது தொண்டைக்குழிக்கு கீழே அமைந்திருக்கிறது. இதில் ஸம்யமம் செய்து வந்தால் மனம் அசைவின்றி நிலைபெற்று சுகம் பெறலாம் மரண்தை வென்ற சித்தர்கள் இப்படி எத்தனையோ சித்து விளையாட்டுகளை உலகுக்குதந்தள்ளனர். மண்ணுலக வாழவின் முற்றுப்புள்ளி மரணம் எனப்படுகிறது. மரணத்தின் பின்பு மனிதநிலை பூவுலகமாந்தர் அறியமுடியாத திரைமறைவு இயக்கமாகத் தொடங்கித் தொடர்கிறது…

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 4

யோக சமாதி சாதனைகள் சிதறாமல் எண்ணங்களைக்குவித்து சமாதிநிலையிலிருந்து மனிதன் வரும்போது எய்துகின்ற அறிவு விளக்கம், உணர்வற்ற நிலையில் எய்துவதைக்காட்டிலும், உணர்வுநிலையில் அடைவதைக் காட்டிலும் உயர்ந்த அறிவு விளக்கமாகும். சமாதிநிலையில் நினைத்தது நடக்கும் வல்லமை சித்திக்கிறது. பறக்கமுடியாத மனிதன் வானில் பறந்து செல்வம், நீரில் மூழ்க முடியாத மனிதன் கடல் ஆழத்தில் தங்குவதும் இத்தகைய சமாதி தவத்தில் அடையமுடிகிறது. சித்தத்தின் மீது தியானம் செய்யும்போது அலைபாய்தல் கலவரப்படுதல் போன்றதடையின்றி அமைதியடையும் சித்தத்தில் விஷயமின்றி ஆனந்தம் மட்டுமே உண்டாக ஆனந்தசமாதி…