இலங்கை இந்திய ஒப்பந்த வரலாறு – 2 – அமரர். அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்
2.தந்தை செல்வாவின் தமிழ் நாட்டு வருகை- 1972 தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குச் சிகரமாக ஒரு புதிய அரசியல் அமைப்பை யாத்து, முந்திய அரசியல் அமைப்பில் ஆங்கில ஆட்சி சிறுபான்மையோருக்கு வழங்கிய பாதுகாப்புக்களையும் பறிக்க இலங்கை அரசு முற்பட்டது. வங்க மக்களுக்குப் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி போரில் இறங்கி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் கொடுத்த சம்பவம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் புது நம்பிக்கையைக் கொடுத்தது. கிழக்கு வங்காளத்திற்குச் சார்பாக இந்தியா செயல் படுவதற்குத் தூண்டுகோலாக…