Browsing: இரா.இராஜாராம்

இது புல்டோசர் போகும் பாதை – இரா.இராஜாராம்

புல்டோசர்கள் போகும் பாதையில் வீடுகளைக் கட்டியது யார்? அந்த வீட்டின் சமையலறையில் மாட்டுக்கறி கொதிப்பதுவும் ஏன் ? அந்த வீட்டு அலமாரிகளில் பர்தாக்களுக்கும் புர்க்காக்களுக்கும் என்ன வேலை? பறக்கும் காகம் கருப்புதான் என்று அந்த வீட்டில் இருந்து ஏன் குரல் கேட்கிறது ? மாட்டுக்கறி கொதிப்பதும் மாட்டிக்கொள்ள புர்காவும் எதிர்க்கும் எதிர்க்குரலும் அந்த வீடுகளிலிருந்து வருமெனில்….. உங்கள் வீடுகளைச் சற்றே நகர்த்திக் கொள்ளுங்கள். “இது புல்டோசர் போகும் பாதை!” -இரா.இராஜாராம்.

எமை கருவறைக்குள் கூட்டிச் சென்ற உன் கையெழுத்து! – இரா.இராஜாராம்

நீ காவிரி கரையில் உதித்த இளஞ்சூரியன், ஈரோட்டு பெருநெருப்பின் அறிவுச் சூரியன், காஞ்சித் தலைவனின் ஞானசூரியன். நீ உன் தனித் தமிழால் தமிழுக்கு அணி செய்தாய், தரணி வாழ் தமிழர்கள் வாழ புதியதோர் விதி செய்தாய். செழுமையான நம் மொழிக்கு செம்மொழி நிலை தந்தாய். பழமையான விழுமியம் காக்க சிரமேற் கொண்டாய். முப்பால் தந்தவனுக்கு கடல் மும்முனையில் சிலை செய்தாய், எப்பால் என்றே குழம்பியோர்க்கு மூன்றாம் பாலென்று பெயர் தந்தாய். கடற்கோள் கொண்ட பூம்புகாரைப் புதுப்பித்தாய், வடக்கே…