Browsing: இறந்தவன் பேசுகிறேன்

இறந்தவன் பேசுகிறேன்(ஆர்தர் ஃபோர்டு வாழ்க்கைக் கதை) – 2 – ஆனந்தி மகேந்திரன்

2. நான் ஆர்தர் பேசுகிறேன் லிலி சொன்னது எனக்குள் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தது. லிலி சொன்னபடி ஒரு புதிய காகிதத்தை டைப் ரைட்டரில் பொருத்தினேன். உடனே அதில் ஆர்தர் எழுத ஆரம்பித்தார். “ருத் நீயும் நானும் முந்தைய பல பிறவிகளில் ஒன்றாக இருந்திருக்கிறோம். நாம் சிநேகிதர்களாக இருந்திருக்கிறோம்; சகாக்களாக இருந்திருக்கிறோம். சில பிறவிகளில் உறவினர்களாகவும் சிலவற்றில் இல்லாமலும் இருந்திருக்கிறோம். பூதவுடலுடன் நானிருக்கும் போது இதை உணர்ந்திருக்கிறேன். இப்போதும் அது நிரூபணமாகியுள்ளது. நாம் ஒரு பிறவியில் கூட எதிரிகளாக…

இறந்தவன் பேசுகிறேன் (ஆர்தர் ஃபோர்டு வாழ்க்கைக் கதை) – 1 – ஆனந்தி மகேந்திரன்

1.ஆர்தர் ஃபோர்ட் இறந்துவிட்டார் தொலைபேசியின் அழைப்போசை எனது ஆழமான உறக்கத்தைச் சற்றே கலைக்க முயன்றது. அப்பொழுது தான் விடிந்து கொண்டிருந்ததால் அது பிழையான அழைப்பாக இருக்குமென நித்திரைச் சோம்பலில் தீர்மானித்தேன். தலையணையில் மேலும் அழுந்தி, விடுபட்ட கனவைத் தொடர முயன்ற என்னை, தொலைபேசியின் தொடர் கதறல் எடுத்துப் பேசச் செய்தது. அடுத்த முனையில் எனக்கு மிகப் பரிச்சயமான குரலொன்று, “ருத் (Ruth), நான் மேரியான் வொல்ஃப் (Marianne Wolf) ஃபிலதெல்ஃபியாவில் இருந்து (Philadelphia) பேசுகிறேன்” என்றது. தொடர்ந்த…

இறந்தவன் பேசுகிறேன் – உதயமுகம் இணைய இதழில் புதிய தொடர்

கனடா வாழ் இலங்கை தமிழ் எழுத்தாளர் ஆனந்தி மகேந்திரன் எழுதும் ஆர்தர் ஃபோர்ட் வாழ்க்கைக் கதை… இறந்தவர்களுடன் பேசும் மீடியமாக தம்மை கூறிக்கொண்ட ஆர்தர் ஃபோர்ட் இறந்த பின்னர், மறுமை வாழ்க்கை குறித்தும், உலக வாழ்க்கை குறித்தும் பேசுவதாக அமைந்த தொடர்…