Browsing: இறையன்பு ஐ.ஏ.எஸ்.

அரசு நிகழ்வுகளை சமஸிடம் அப்டேட் செய்கிறாரா இறையன்பு?

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அன்றன்றைக்கு நடக்கும் கூட்டத்தையே சமஸின் தலையங்கத்தின் அடிப்படையில்தான் நடத்துவார் போல. ஏற்கெனவே முதலமைச்சர் ஸ்டாலினை அதிகாரிகள் ஆட்டிப் படைப்பதாகவும், அவர்கள் சொல்படிதான் ஆடுவதாகவும் கோட்டையில் பத்திரிகையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் அதிகாரிகளின் ராஜ்ஜியமே இன்னும் நடப்பதாகவேறு கட்சிக்காரர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள். நீங்க ரொம்ப நல்லவரூ என்று முதலமைச்சரை புகழ்ந்து புகழ்ந்தே அவரை கட்சியிடமிருந்து விலக்கி வைக்கும் முயற்சி நடப்பதாக நல்லோர் பலர் வேதனை தெரிவிக்கிறார்கள். தன்னையும் கட்சியையும் உயிராக நேசித்து…

இது தமிழ்நாடு அரசு – இனி இங்கே தமிழுக்கே முதலிடம்!

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். தமிழக தலைமைச்செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சனுக்கு பதிலாக ஆளுநரின் ஒப்புதலுடன் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலர் பொறுப்பில் இருந்த வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குனராக இருந்து வந்தார். தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 1996-2001 காலகட்டத்தில்…