இலங்கையில் நடப்பது புரட்சியா? புடலங்காயா? – Fazil Freeman Ali
ஒழுக்கமும் அரசியல் புரிதலும் இல்லாத புரட்சி என்பது ஒரு உணர்வுபூர்வமான கும்பலின் வன்முறைச்செயல் மட்டுமே. அது எந்த உயரிய மாற்றத்தையும் உருவாக்கிவிடாது. முகநூலில் பல தோழர்கள் ரஜபக்சேக்கள் பயந்து ஓடியதையும் அவர்களின் மாளிகை பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டதையும் சூரையாடப்பட்டதையும் சிலாகித்து பதிவுகள் இடுவதின் பின்னாலிருக்கும் உளவியல் எனக்கு புரிகிறது. உங்கள் மகிழ்ச்சியில் நான் எந்த தவறும் காணவில்லை. ஆனால் அதை அக்டோபர் புரட்சியுடனும் மாவோவின் long march உடனும் ஒப்பிடுவதை பார்க்கையில் உண்மையிலேயே கொஞ்சம் ஆயாசமாக இருக்கிறது. கொடுங்கோலர்களும்…