இலங்கை மலையகத் தமிழரின் 150 ஆண்டு வரலாறு – மலையக எழுத்தாளர் எஸ்தர்
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் ஸ்ரீலங்காவின் மலையகப் பகுதிகளிலும் தேயிலை மற்றும் காப்பித் தோட்டங்களையும், பர்மாவில் (மியான்மர்) ரப்பர் தோட்டங்களையும், மொரிசியஸ் நாட்டில் கரும்புத் தோட்டங்களையும் 19-ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் உருவாக்கினர். இவ்வாறு புதிதாக மலைத் தோட்டங்களை உருவாக்க, காடுகளைத் திருத்தி அமைக்க வேண்டியதிருந்தது. அடுத்து இங்குப் பயிரிடப் பட்ட காப்பி, தேயிலை, ரப்பர் ஆகிய பணப் பயிர்களைப் பராமரிக்கவும், இவற்றின் பலனைச் சேகரிக்கவும் மிகுதியான அளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இலங்கையின் மலையகப் பகுதியின் தலை…