Browsing: உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர்களில் இவர்தான் டாப் என்றால் மற்றவர்கள் டூப்பா? உதயநிதி பேச்சால் சலசலப்பு #udhayanidhistalin

தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளில் ஒருவை நம்பர் ஒன் என்று உதயநிதி குறிப்பிட்டதால் மற்ற அமைச்சர்கள் மத்தியில் சலசலப்பு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.. https://youtu.be/lAzXe5hLNjY

அன்பில் மகேஷுக்கு எதிராக அதிகாரிகளின் சதிவலை – ஆதனூர் சோழன்

அமைச்சரான புதிதில் கல்வித்துறையில் நிறைய மாற்றங்களை செய்யும் ஆர்வத்தில் அன்பில் மகேஷ் செயல்பட்டார். ஆனால், அவருடைய ஆர்வம் நீர்த்துப்போகும் வகையில், அதாவது சொந்தமாக எதையும் யோசிக்காத வகையில் முட்டுக்கட்டை போட்டது முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் என்று தொடக்கத்திலேயே பேசிக் கொண்டார்கள். கல்வித்துறை அதிகாரிகளின் இந்த கருத்தை முதன்முதலில் வெளியிட்டது உதயமுகம்தான். கல்வித்துறை அதிகாரிகளை அமைச்சர் நேரடியாக கலந்து ஆலோசிக்கக்கூட அவரால் முடியவில்லை என்பதுதான் உண்மை. கல்வித்துறை இயக்குனர்கள் அமைச்சரைச் சந்தித்து ஆலோசித்த காலம் மலையேறிவிட்டது. இயக்குனர்களின்…

மாமன்னன் படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு – அமைச்சராகிறார் உதயநிதி?

நெஞ்சுக்குநீதி படத்தை வெளியிட்டபிறகு, மாமன்னன் படம்தான் எனது கடைசிப் படமாக இருக்கும். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் தவிர்க்கிறேன். இதற்கு காரணம் அரசியலில் நான் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு படத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தது 45 நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது. அந்த நாட்களில் நான் அரசியலில் ஈடுபடமுடியாமல் போகிறது. எனது தொகுதியை கவனிக்க முடியாமல் போகிறது. அரசியலில் சினிமாவைக் காட்டிலும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கு நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. சினிமாவில் இருப்பது எனக்கு…

உதயநிதிக்கு பள்ளிக்கல்வித் துறையா? – கோட்டையில் கசிந்த தகவல்கள்!

கடந்த ஓராண்டில் பள்ளிக்கல்வித் துறையே நாசமாகிவிட்டதாகவும், இதற்கு காரணம் ஐஏஎஸ் அதிகாரிகளின் கூத்துதான் என்றும், உதயசந்திரனின் அதிகாரக் குவிப்பும்தான் என்று பரவலாக பேசப்படுகிறது. செங்கோட்டையனே பரவாயில்லை என்று பேசும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இல்லம்தேடி கல்வி திட்டத்திலேயே நிறைய பணம் கொள்ளைபோனதாக சொல்லும் நிலையில், அந்தத்திட்டத்தால் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்ற புள்ளிவிவரமும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் அந்தத் திட்டத்தை மேலும் நீடிப்பது தேவையற்றது என்று அனுபவமிக்க ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால்,…

டெல்லியை அதிரவைத்த ஸ்டாலின் – மோடியிடம் நேருக்குநேர் உரிமைக்குரல்!

டெல்லிக்கு மோடியிடம் கெஞ்சப் போயிருக்கிறார் என்றார்களே… ஸ்டாலினை டெல்லியே தூக்கி கொஞ்சியிருக்கிறது… https://youtu.be/wFipM5qXp2s

16 அடி பாயும் குட்டிப்புலி ஸ்டாலின் – ஆதனூர் சோழன்

எழுதத் தெரியாவிட்டால் என்ன? தூய தமிழில் பேசத்தெரியாவிட்டால் என்ன? சிலருடைய நடவடிக்கைகளே இலக்கியத் தரம் மிக்கவையாக இருக்கும். அதிலும் அந்த நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டோரின் நலன் சார்ந்ததாக, ஒரு இனத்தின் பெருமையை மீட்டெடுப்பதாக, ஒரு நாகரிகத்தின் தொன்மையை பாதுகாப்பதாக, ஒரு மொழியின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்தால் அது எத்தனையோ இலக்கிய படைப்புக்கான கருக்களை வாரி வழங்கும். அந்த வகையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் இலக்கியப் படைப்புகளுக்கு கருக்களை வாரிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்.…

“முடிந்தால் தமிழக சட்டமன்றத்தை ” முடக்கிப் பாருங்கள்” – எடப்பாடிக்கு உதயநிதி சவால்!

மதுரை மாநகராட்சி, மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், வெற்று வாக்குறுதி கொடுத்து காணாமல் போன அடிமைகளுக்கு பாடம் புகட்டிட வேண்டும்மென்றும், மகளிருக்கான உரிமைத் தொகை மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்றும், மேலும் தென்மாவட்ட மாணவர்களின் கல்விக்கு பேருதவியாக மதுரையில்…