Browsing: உதயநிதி

அமைச்சர்களில் இவர்தான் டாப் என்றால் மற்றவர்கள் டூப்பா? உதயநிதி பேச்சால் சலசலப்பு #udhayanidhistalin

தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளில் ஒருவை நம்பர் ஒன் என்று உதயநிதி குறிப்பிட்டதால் மற்ற அமைச்சர்கள் மத்தியில் சலசலப்பு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.. https://youtu.be/lAzXe5hLNjY

மாமன்னன் படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு – அமைச்சராகிறார் உதயநிதி?

நெஞ்சுக்குநீதி படத்தை வெளியிட்டபிறகு, மாமன்னன் படம்தான் எனது கடைசிப் படமாக இருக்கும். நிறைய வாய்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் தவிர்க்கிறேன். இதற்கு காரணம் அரசியலில் நான் நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு படத்தை ஒப்புக்கொண்டால் குறைந்தது 45 நாட்கள் ஷூட்டிங் இருக்கிறது. அந்த நாட்களில் நான் அரசியலில் ஈடுபடமுடியாமல் போகிறது. எனது தொகுதியை கவனிக்க முடியாமல் போகிறது. அரசியலில் சினிமாவைக் காட்டிலும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. எனக்கு நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. சினிமாவில் இருப்பது எனக்கு…

தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!

கம்யூனிஸ்ட் கட்சியில் எனக்குப் பிடித்த தலைவர்களில் சுர்ஜித், என்.சங்கரய்யாவை குறிப்பாக கூறுவேன்… இருவருமே கட்சியை வெகுஜனப்படுத்தியவர்கள் என்பது எனது கருத்து… என்.எஸ். நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. ஆனால், கடந்த சில நாட்களாகவே தோழர்கள் முகநூலை வாழ்த்துப் பதிவுகளால் நிறைத்து வருகிறார்கள்… நான் என்ன எழுதுவது..? என்.எஸ். மதுரை வந்தால் தீக்கதிர் அலுவலகத்தில்தான் தங்குவார். நான் தீக்கதிரில் பணியாற்றியபோது, இதை நான் பார்த்திருக்கிறேன். கட்சி உறுப்பினரல்லாத நபராக தீக்கதிர் ஆசிரியர் குழுவில் இணைக்கப்பட்ட முதல் ஆள் நானாகத்தான்…

அண்ணாவிடம் இருந்தது என்ன பொடி? கலைஞர் சொன்ன ரகசியம்!

1964-ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டை யிலுள்ள தியாகராயர் கல்லூரியில் தமிழ்ப் பேரவை ஒன்று துவக்கப்பட்டது. துவக்க விழாவிற்குப் பேரறிஞர் அண்ணாவை அழைக்கத் தீர்மானித்தனர். இதைக் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தபோது, அவர்கள் ஏற்கவில்லை. அப்போது மாணவர்கள் அறப்போராட்டத்தில் இறங்கியதால் கல்லூரி மூடப்பட்டது. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி போன்ற கல்லூரிகளுக்கும் இது “காட்டுத் தீ’யாய் பரவியது. போராட்டத்தின் தீவிரம் கண்டு நிர்வாகம் அண்ணாவை அழைக்க இசைவளித்தது. விழா நாளும் வந்தது. அண்ணாவுடன் கலைஞரும் பங்கேற்றார். மாணவர்கள் போராட்டம்…

கலைஞரிடம் இருந்த விலை மதிப்பற்ற பொருள்!

ஒருமுறை தமிழர்கள் பேரவைகளின் அழைப்பை ஏற்று, கலைஞர் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தாயகம் திரும்பினார். முதல் முறையாக வெளிநாடு சென்று திரும்புவதால் விலையுயர்ந்த பொருட்கள் அவரிடம் இருக்குமென்று கருதிய சென்னை விமான நிலையத்தில் திமிர் பிடித்த ஒரு அதிகாரி, “உங்களிடம் சோதனை செய்யலாமா?’ எனக் கேட்டார். “ஓ… தாராளமாய்” என்றார் கலைஞர். பரிசோதனை அதிகாரி, “உங்களிடம் விலையுயர்ந்த பொருட்கள் ஏதேனும் உள்ளனவா?” “ஆம்” என்றார் கலைஞர். “நீங்கள் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டால் நல்லது”…

மோடியின் புல்லட் புரூஃப் காரை தளபதி ஏற்கக் கூடாது! – Athanurchozhan

நமது முதல்வருக்கு பிரதமர் மதிப்பளிக்கிறார் என்பது பெருமைதான்…  1980ல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டத்திலேயே கலைஞர் அமரவைத்து மதிப்பளித்தவர் இந்திரா…  அறுதிப் பெரும்பான்மை பெற்ற அமைச்சரவை பதவியேற்பிலேயே கலைஞருக்கு இடமளித்து மரியாதை செய்தவர் இந்திரா…  ஜெயலலிதாவுக்கு யார் புல்லட் அனுப்பியது என்பதை யாரேனும் தெளிவுபடுத்தினால் இந்த பதிவுக்கு அர்த்தம் கிடைக்கும்… தூக்கமில்லாத இரவுகளை கொடுத்த ஜெயலலிதாவுக்கு வாஜ்பாய் கொடுத்தது அந்த மரியாதை… அதன்பிறகு, ஐந்தாண்டுகள் நிம்மதியான ஆட்சி நடத்த வாய்ப்பளித்தவர் கலைஞர்… இப்போது, திமுகவின் தயவும் தளபதியின்…

புதிய சட்டமன்றக் கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை மாற்றியே தீரவேண்டும்! – LR JAGADHEESAN

கலைஞரின் எதிரிகள் இதோ ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களின் கயவாளித்தனத்தை. கழுத்தறுப்பு வேலையை. கலைஞரின் பெயரை வரலாற்றில் இருந்து இருட்டடிப்பு செய்யும் எத்துவாளித்தனத்தை. அற்புதமாய் வடிவமைத்து அழகாய் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் புதியதலைமைச்செயலகத்தை ஒரு அகங்காரி கொடுங்கோலி அப்பட்டமான அரசியல் அசூயையால் சிதைத்து சின்னாபின்னமாக்கினார். தன் அரசியல் எதிரி கட்டிய புதிய தலைமைச்செயலகத்தில் கால் வைக்கமாட்டேன் என்று சபதம் போட்டு சாதித்துக்காட்டினார் அந்த சேலைகட்டிய சர்வாதிகாரி. அதற்கு ஒத்து ஊதினர் ஊடக அயோக்கியர்கள். இதோ அதே அயோக்கியர்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள் தங்களின்…

1 2 3 8