இந்திப் பிரச்சாரத்தை மூடிட்டு ஓடு – உதயமுகம் வார இதழ் கவர் ஸ்டோரி!
இந்தி ஒழிக, தமிழ் வாழ்க! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! வழக்கமாக இந்த முழக்கங்களை தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமே எழுப்புவார்கள். ஆனால், மொழித் திணிப்பால் தனது சுயத்தை இழந்து கரைந்துபோன மொழிகளுக்கு சொந்தக்காரர்களுக்கு காலம் சரியான பாடத்தை கற்பித்திருக்கிறது. தமிழ்நாடு மட்டுமே இந்தியை எதிர்க்கிறது. திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் என்று தமிழை சொல்கிறீர்கள். ஆனால், கேரளாவோ, ஆந்திராவோ, கர்நாடகாவோ, தெலங்கானாவோ இந்தியை எதிர்க்கவில்லையே என்று ஒன்றிய ஆளும் கட்சியினர் கேட்பார்கள். வட இந்தியாவில் மராட்டியம், ராஜஸ்தான், ஒடிஸா,…